/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷன் ரோடு புதர் அகற்றியதால் நிம்மதி; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : ஜன 02, 2025 08:11 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டின் இருபக்கமும் இருந்த புதர், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு, நாள்தோறும் ஏராளமான பயணியர் வந்து செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன் ரோட்டின் இருபக்கமும் அதிக அளவு செடிகள் முளைத்து புதர் போல இருந்தது.
இதனால், இந்த வழித்தடத்தில் இரவு நேரத்தில் பயணியர் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் சிலர், இந்த ரோட்டின் அருகாமையில் உள்ள மண் வழி தடத்தை உபயோகித்து வந்தனர். இதுபற்றி, 'தினமலர்' நாளிதழிலில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக, ரோட்டோரத்தில் இருபக்கமும் இருந்த புதர்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, பைக், கார் போன்ற வாகனங்கள் சென்று வருவதற்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் வசதியாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த ரோட்டில், இரு மாதங்களுக்கு ஒரு முறை செடிகளை அகற்றம் செய்து பராமரிக்க வேண்டும், என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.