/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்புக் கூட்டம்
/
மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்புக் கூட்டம்
ADDED : ஜன 30, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;மகாத்மா காந்தியின், 77வது நினைவு தினத்தையொட்டி பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில், மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நீலகிரி எம்.பி., ராஜா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், சர்வ மதங்களை சார்ந்தோர், வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் ரவி, கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பேரூராட்சி தலைவர்கள் விஷ்வபிரகாஷ், பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.