/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பிகள் இடமாற்றம் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி: 'தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : பிப் 20, 2024 11:03 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, கூளநாயக்கன்பட்டி அருகே உயர்த்தி கட்டப்பட்ட பாலத்தில், 'தினமலர்' செய்தி எதிரொலியாக, மின்கம்பிகள் மாற்றம் செய்யும் பணிகள் நடக்கிறது.
பொள்ளாச்சி - உடுமலை நான்கு வழிச்சாலையில் இருந்து தெற்கே பிரிந்து செல்லும், கெடிமேடு முதல் எரிசனம்பட்டி வரையிலான ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக, கூளநாயக்கன்பட்டி அருகே பாலம் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த பாலத்தில் மிக தாழ்வாக மின்கம்பிகள் கடந்து சென்றன. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கூட பாலத்தை கடந்து பயணம் செய்ய முடியாத நிலை இருந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படும் அச்சமும் இருந்தது.
இதுபற்றி, உடுக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பரமசிவம், கோவை கலெக்டருக்கு மனு அனுப்பினார். அதன்பிறகும், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இப்பிரச்னை குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மின்கம்பிகள் இடமாற்றம் செய்யும் பணி நடக்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.