/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுண்டம்பாளையம் தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகள் இடம் மாற்றம்
/
கவுண்டம்பாளையம் தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகள் இடம் மாற்றம்
கவுண்டம்பாளையம் தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகள் இடம் மாற்றம்
கவுண்டம்பாளையம் தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகள் இடம் மாற்றம்
ADDED : மார் 13, 2024 01:42 AM
பெ.நா.பாளையம்;கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில், பழுதடைந்த நிலையில் இருந்த மூன்று ஓட்டு சாவடிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்களின் பிரமுகர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க., தி.மு.க., காங்., பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமை வகித்தார்.
இதில் கவுண்டம்பாளையத்தில் மொத்தம் உள்ள, 435 ஓட்டுச் சாவடிகளில் மாற்றங்கள் உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடந்தது. இதில் இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி பின்புறம் தச்சன் தோட்டம் பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த, 239 எண்ணுள்ள ஓட்டு சாவடி, அதே பகுதியில் உள்ள காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம் அரசு துவக்க பள்ளியில் இருந்த, 189, 192வது எண்ணுள்ள ஓட்டுச்சாவடிகள், அதே வளாகத்தில் உள்ள மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது என, கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோவை வடக்கு தாசில்தார் மணிவேல், துணை வட்டாட்சியர் (தேர்தல்) கதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

