/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரை கி.மீ., ரோடு சீரமைக்க தயக்கம் வாகமலை தொழிலாளர்கள் தவிப்பு
/
அரை கி.மீ., ரோடு சீரமைக்க தயக்கம் வாகமலை தொழிலாளர்கள் தவிப்பு
அரை கி.மீ., ரோடு சீரமைக்க தயக்கம் வாகமலை தொழிலாளர்கள் தவிப்பு
அரை கி.மீ., ரோடு சீரமைக்க தயக்கம் வாகமலை தொழிலாளர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 06, 2025 11:04 PM

வால்பாறை, ;அரை கி.மீ., துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருவதால், தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் குரூப் டீ எஸ்டேட். இங்கிருந்து, 3 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது வாகமலை எஸ்டேட். இந்த எஸ்டேட் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் அரை கி.மீ., துாரம் உள்ள ரோடு கடந்த, 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
தொழிலாளர்கள் கூறியதாவது:
'தமிழக கேரள எல்லையில் உள்ள வாகமலை எஸ்டேட் பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இங்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் போடப்பட்ட தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை.
இதனால், இரவு நேரத்தில் யானைகள் வந்தாலும் தெரிவதில்லை. மேலும் அரை கி.மீ., துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க கடந்த, 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
தொழிலாளர்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் கரடு, முரடாக உள்ள ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.