/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மணிக்கூண்டில் கடிகாரங்கள் அகற்றம்
/
மணிக்கூண்டில் கடிகாரங்கள் அகற்றம்
ADDED : பிப் 10, 2024 01:10 AM
மேட்டுப்பாளையம்;பஸ் ஸ்டாண்டில் கடைகள் இடித்து புதிதாக கட்டுவதால், மணிக்கூண்டில் இருந்த கடிகாரங்கள் அகற்றப்பட்டன.
மேட்டுப்பாளையத்தில் புதிதாக கட்டிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைகள், 1984ம் ஆண்டு திறக்கப்பட்டது. கட்டடத்தின் தாங்கும் திறன் குறித்து ஆய்வு செய்த பின், இடித்துவிட்டு புதிதாகக் கட்ட பொறியாளர்கள், அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, புதிதாக பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைகள் கட்ட, அரசு, 8.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
அதனால் பஸ் ஸ்டாண்ட், கடைகள் ஆகியவற்றை இடித்து விட்டு, புதிதாக கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், ரோட்டரி சங்கம், நகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகளின் மீது மணிக்கூண்டு அமைத்து, அதில் நான்கு புறமும் கடிகாரங்கள் அமைத்தனர். இது, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தது.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட், கடைகள் இடிப்பதால், ரோட்டரி சங்கத்தினர் கடிகாரங்களை அகற்றினர். விரைவில் பஸ் ஸ்டாண்ட், கடைகள் இடித்து புதிதாக கட்டும் பணிகள் துவங்க உள்ளன.