போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மே 08, 2025 01:03 AM

கோவை; கோவை - அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டி கடைகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள குறிப்பாக நடைபாதை உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்திருக்கும் கடைகளால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
தற்போது, இக்கடைகளை அகற்ற, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி வருகின்றனர். எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் நடத்தப்படும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில், ஆர்.எஸ்.புரம், சுக்ரவார் பேட்டை, கோவை அரசு மருத்துவமனை எதிரே ஹைவே காலனி, வின்சென்ட் ரோடு, சுந்தராபுரம் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த, 30க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போஸ்ட் ஆபீஸ் வழியாக அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் மேம்பாலம் செல்லும் வழியில் இடதுபுறமாக ரோட்டையொட்டி வைத்திருந்த தள்ளுவண்டி டிபன் கடைகளை நேற்று நகரமைப்பு பிரிவினர் அகற்றினர். கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்கியும், கடை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அகற்றாததால் நடவடிக்கை எடுத்துள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
