/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு அகற்றம்; அட்வகேட் கமிஷனர் ஆய்வு
/
ஆக்கிரமிப்பு அகற்றம்; அட்வகேட் கமிஷனர் ஆய்வு
ADDED : நவ 14, 2024 08:38 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, தனி நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர், நோட்டீஸ்களை வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், கடந்த, 9ம் தேதி முதல் பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு கட்டடங்கள், படிக்கட்டுகள், மேற்கூரைகள் அகற்றப்பட்டன.
நேற்று உயர்நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் ஸ்ரீராம் ரங்கராஜன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் சரவணசெல்வம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
வழக்கு தொடர்ந்த மனுதாரர், 'மீண்டும் ஆக்கிரமிப்புகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தினார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பல முறை எச்சரிக்கை விடுத்தும், நோட்டீஸ் வழங்கியும் அகற்றாத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இதையடுத்து, நேற்று அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்தார்.
பல்லடம் ரோடு, மீன்கரை ரோடு, வால்பாறை ரோடுகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து கேட்டறிந்தார்.
ஆக்கிரமிப்பு மற்றும் அகற்றப்பட்டவை குறித்து ஆய்வு செய்து குறிப்பெடுத்துள்ளார். ஆய்வின் முடிவுகளை கோர்ட்டில் சமர்பிக்க உள்ளார். மனுதாரரும் உடன் இருந்தார். தொடர்ந்து, இன்றும் ஆய்வு நடக்கிறது.
இவ்வாறு, கூறினர்.