/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை
/
கோட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை
கோட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை
கோட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை
ADDED : ஜன 21, 2025 11:52 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஆனைமலை அருகே கோட்டூர் பேரூராட்சியில், குமரன் கட்டம் முதல், கோட்டூர் பேரூராட்சி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, தன்னார்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். 'பொக்லைன்' இயந்திரங்களுடன் அதிகாரிகள், ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதில், ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த, ஆறு வீடுகளில் சுற்றுச்சுவர், டெரஸ் கட்டடம் போன்றவை இடிக்கப்பட்டது.
ஒரு வீட்டில் மட்டும், ஐந்து அடி வரை இடிக்கப்பட்டது; மற்றவை காம்பவுண்ட் சுவர் போன்றவை அகற்றப்பட்டன. கோட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக ஆறு வீடுகள் அகற்றப்பட்டன.