/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
ஆனைமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : நவ 01, 2025 12:11 AM

ஆனைமலை: ஆனைமலை பகுதியில் தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில், ரோட்டோரங்களில் தள்ளுவண்டி கடைகள், நிரந்தர கடைகளின் ெஷட் என ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனைமலை உதவி கோட்ட பொறியாளர் தினேஷ்குமார் தலைமையில், இளநிலை செயற்பொறியாளர் செந்தில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
அதில், ஆனைமலை முக்கோணம் முதல், தாத்துார் பிரிவு வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடைகள் முன்பாக நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகள், ெஷட், தள்ளுவண்டி கடைகளை அகற்றினர்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, விபத்துகளையும் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மழைநீர் வடிகால் அமைக்க உள்ளதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

