/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரியநாயக்கன்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
பெரியநாயக்கன்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : அக் 29, 2025 12:31 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த விளம்பர பலகைகள் மற்றும் கடைகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் வண்ணான் கோவில் பிரிவு வரை உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் கீழ் பகுதியில் காய்கறி கடைகள், பழக்கடைகள், டிபன் ஸ்டால்கள், பாணி பூரி கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இதேபோல பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் கடைகளின் விளம்பர பலகைகளும் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் வாகன போக்குவரத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த, 17ம் தேதி வரை கெடு விதித்திருந்தனர்.
ஆனாலும், பலர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர். இதையடுத்து நேற்று காலை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த விளம்பர பலகைகள் மற்றும் பாலத்தின் கீழ் உள்ள தரைக் கடைகளை அதிரடியாக அகற்றினர்.
மேலும், இப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால், உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரித்தனர்.

