/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எருக்கம்பெனி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்; ரவுண்டானா அமைக்க திட்டம்
/
எருக்கம்பெனி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்; ரவுண்டானா அமைக்க திட்டம்
எருக்கம்பெனி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்; ரவுண்டானா அமைக்க திட்டம்
எருக்கம்பெனி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்; ரவுண்டானா அமைக்க திட்டம்
ADDED : அக் 25, 2024 10:26 PM

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றியுள்ளனர். எருக் கம்பெனி அருகே சங்கனுார் பள்ளத்தின் குறுக்கே உள்ள பாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்டி, அச்சாலைகளை அகலப்படுத்தி, 'ரவுண்டானா' அமைக்க, 20 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. தற்போது சாய்பாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. இவ்விரு மேம்பாலங்களுக்கும், 761 மீட்டர் இடைவெளியே இருக்கிறது. அவற்றை இணைத்தால், கவுண்டம்பாளையம் சாலை - சங்கனுார் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கலாம் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, சில மாதங்களுக்கு முன் கள ஆய்வு செய்தார்.
எருக் கம்பெனி அருகே மேம்பாலங்களுக்கு இணையாக சாலையை அகலப்படுத்தி, சங்கனுார் ரோடு - கவுண்டம்பாளையம் ரோடு சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 20 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் ரோட்டில் எருக் கம்பெனி பகுதி விசாலமாக காணப்படுகிறது.