/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகை சாலையில் பழைய கார்கள் அகற்றம்
/
சிறுமுகை சாலையில் பழைய கார்கள் அகற்றம்
ADDED : ஆக 12, 2025 08:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் சங்கர் நகர், எல்.ஐ.சி. நகர், தாலுகா அலுவலகம் அருகில் என பல்வேறு இடங்களில் பழைய வாகனங்களை பிரித்து உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் ஏராளமான கடைகள் உள்ளன.
அண்மையில் எல்.ஐ.சி. நகர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 பழைய கார்கள் எரிந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து இதுபோன்று பழைய வாகனங்களை குவித்து வைக்க கூடாது. சாலையோரம் நிறுத்தி வைக்க கூடாது என போலீசார் அறிவுறுத்தி வந்தனர். மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களை போலீசார் கிரேன் உதவியுடன் அகற் றினர்.
---