/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர புதர்கள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
/
ரோட்டோர புதர்கள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ரோட்டோர புதர்கள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ரோட்டோர புதர்கள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ADDED : மே 30, 2025 11:57 PM

மடத்துக்குளம்; வடிகால்களில் உள்ள புதர்களை அகற்றி, மழை நீர் ரோட்டில் தேங்காமல் தடுக்கும் பணிகள், மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், கணியூர்-கடத்துார் ரோடு உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் மாவட்ட இதர ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரோடுகளில், மழை நீர் வடிகால்கள் மற்றும் ரோட்டோரங்களில், காணப்படும் புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும், ரோட்டில் மழை நீர் தேங்காத வகையில், வடிகால்களை தண்ணீர் சென்று சேரும் வகையில், மண்மேடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
மழைக்காலத்தையொட்டி, அனைத்து ரோடுகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினர் தெரிவித்தனர்.