/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாய்ந்த நிலையில் உள்ள போர்டை அகற்றுங்க!
/
சாய்ந்த நிலையில் உள்ள போர்டை அகற்றுங்க!
ADDED : ஏப் 21, 2025 05:32 AM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம் ஊராட்சியில், மகளிர் சுய உதவி குழு கட்டடம் வெளிப்புறம் உள்ள போர்டு சரிந்து விழும் நிலையில் உள்ளது.
கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம் ஊராட்சி வளாகத்தில், அரசு பள்ளி, மகளிர் சுய உதவி குழு கட்டடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதன் வெளிப்புறத்தில், அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை தகவல்கள் அடங்கிய போர்டு சாய்ந்த நிலையில் உள்ளது. இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் அழிந்து, போர்டு பயனற்று உள்ளது.
இந்த போர்டு எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பள்ளி கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், மாணவர்கள் பலர் இதன் அருகாமையில் விளையாடுகின்றனர். முதியவர்கள் சிலர் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆபத்தாக உள்ள போர்டை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

