/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதையில் உள்ள புதரை அகற்றுங்க!
/
நடைபாதையில் உள்ள புதரை அகற்றுங்க!
ADDED : டிச 09, 2024 08:05 AM

கிணத்துக்கிடவு : கிணத்துக்கடவு செக்போஸ்ட் அருகே, நடைபாதையில் உள்ள புதர் செடிகளை அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக, வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதில், செக்போஸ்ட் அருகே, மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோடு நடைபாதையில், செடிகள் அதிகளவு முளைத்து புதராக காட்சி அளிக்கிறது.
பொதுமக்கள் பலர் நடைபாதையை உபயோகிக்காமல் சர்வீஸ் ரோட்டிலேயே நடந்து செல்கின்றனர். இதனால், சில நேரங்களில் விபத்து நடந்து வருகிறது. மேலும், நடைபாதையில் பயணிக்கும் சிலருக்கு பூச்சி மற்றும் கொசுத்தொல்லை, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள புதர் செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும், என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.