/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துகளை தவிர்க்க வேகத்தடையை அகற்றுங்க!
/
விபத்துகளை தவிர்க்க வேகத்தடையை அகற்றுங்க!
ADDED : செப் 03, 2025 10:54 PM

பொள்ளாச்சி; 'நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட தொடர் வேகத்தடைகளால் விபத்துகள் ஏற்படுகிறது,' என, சுற்றுலா வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சுற்றுலா வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர், வட்டார போக்குவரத்து அலுவலர் செழியனை சந்தித்து, வேகத்தடைகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
இது குறித்து சங்க நிர்வாகி முருகன் கூறியதாவது:
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, ராசக்காபாளையம், கொண்டம்பட்டி என நெடுஞ்சாலைகளில் தொடர் வேகத்தடைகள் பட்டையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளில் வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுகிறது. மேலும், வாகனத்தில் இருந்து நட்டு போன்ற உதிரிபாகங்கள் கழன்று விடுகின்றன.
மேலும், வாகனங்களில் வேகமாக செல்வோர் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. ஒரு சிலர் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். வாகனங்களில் கர்ப்பிணிகள், முதியோர்களை அழைத்துச் செல்லும் போது, அவர்கள் சிரமப்படுகின்றனர்.
தொடர் வேகத்தடைகளை அகற்றி வாகன ஓட்டுநர்கள் நிம்மதியான பயணம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது. ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு, கூறினார்.