/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகற்றிய வழிகாட்டி பலகைகள் அமைப்பு வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
/
அகற்றிய வழிகாட்டி பலகைகள் அமைப்பு வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
அகற்றிய வழிகாட்டி பலகைகள் அமைப்பு வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
அகற்றிய வழிகாட்டி பலகைகள் அமைப்பு வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
ADDED : டிச 22, 2025 05:25 AM

வால்பாறை: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேலும் இரண்டு இடங்களில் வழிகாட்டி பலகை அமைக்கபட்டுள்ளது.
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது அய்யர்பாடி ரோப்வே. இங்குள்ள, 40வது கொண்டைஊசி வளைவில் மூன்று ரோடுகள் சந்திக்கின்றன.
பொள்ளாச்சி, வால்பாறை, கருமலை பாலாஜி கோவில் செல்லும் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் இருந்த வழிகாட்டி பலகை, ரோடு விரிவாக்கப்பணி மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
இதே போல், சோலையாறு அணை செல்லும் ரோட்டில் மாதா கோவில் சந்திப்பு, பழைய வால்பாறை ஆகிய இடங்களிலும் ரவுண்டானா அமைக்கும் பணிக்காக, வழிகாட்டி பலகை அப்புறப்படுத்தப்பட்டது.
ஆனால், பணி நிறைவடைந்த பின்னரும் வழிகாட்டி பலகை அமைக்கப்படாமல் இருந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, முதல் கட்டமாக, 40வது கொண்டை ஊசி வளைவில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டது.
தற்போது, மாதா கோவில்சந்திப்பு, பழைய வால்பாறை ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணியர் வசதிக்காக வழிகாட்டி பலகை அமைக்கபட்டுள்ளது.
தற்போது, மேலும் இரு இடங்களில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கவனிங்க சார்! வால்பாறை நகரில் அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் வேகத்தடை உருக்குலைந்த நிலையில் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதே போல், அடிக்கடி விபத்து ஏற்படும் வால்பாறை - ஸ்டேன்மோர் ரோட்டில் கூடுதலாக வேகத்தடை அமைக் க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

