/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்தாபுதுார் பகுதியில் மின்கம்பங்கள் மாற்றம்
/
சித்தாபுதுார் பகுதியில் மின்கம்பங்கள் மாற்றம்
ADDED : மே 09, 2025 11:57 PM
கோவை: கோவை சித்தாபுதுார் சாலையில் கடந்த, 7ம் தேதி கனமழையால் மின்கம்பங்கள் சரிந்தன. இக்கம்பங்கள் அகற்றப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 7ம் தேதி மாலை 3:00 மணியளவில் கோவையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அச்சாலையில் அதிகவேக காற்று காரணமாக, அப்பகுதியில் இருந்த, 14 கம்பங்கள் சேதமடைந்தன. உடனடியாக மின்வாரிய அலுவலர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் பழையது என்பதால், மொத்தமாக அகற்றப்பட்டு புதிய கம்பங்கள் அமைக்கும் பணியில், 100 பணியாளர்கள் பகல், இரவாக ஈடுபடுத்தப்பட்டனர்.
மேற்பார்வை பொறியாளர் சதிஸ்குமார் கூறுகையில், ''கடந்த 7ம் தேதி மாலை, 4:00 மணிக்கு கம்பங்கள் சரிந்தன. 8ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு மின்விநியோக சப்ளை வழங்கிவிட்டோம்.
தற்போது, பழைய கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, ஆர்.எஸ்.ஏ., 40 அடி கம்பங்கள் போட்டுள்ளோம். இதனால், சாலையின் அகலமும் அதிகரித்துள்ளது. 30 மீட்டர் இடைவெளியில் 16 கம்பங்கள் அமைத்துள்ளோம். அடுத்தகட்டமாக மீதமுள்ள கம்பங்களும் மாற்ற திட்டமிட்டுள்ளோம், '' என்றார்.