sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : டிச 09, 2024 07:58 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனியார் போட்ட ரோடு நல்லாயிருக்கு!


கிணத்துக்கடவு பேக்கரில நண்பருடன் டீ குடித்துக்கொண்டிருந்த போது, நெ.10 முத்துாரைச்சேர்ந்த ரெண்டு பேர், ரோடு பிரச்னைனு பேசிட்டு இருந்தாங்க. என்ன பேசுறாங்கன்னு கவனித்தேன்.

கிணத்துக்கடவு, பகவதிபாளையத்தில் இருந்து, நெ.10 முத்துார் போகற ரோடு குறுகலா, குண்டும், குழியுமா இருக்கு. அந்த வழியில போறதே சிரமமா இருக்கு. ஆனா, அந்த வழியில இருக்கற லே-அவுட்கள்ல, நிறைய பேர் வீடு கட்டியிருக்காங்க. அதனால, சகிச்சிக்கிட்டு போக வேண்டியிருக்கு.

அந்த வழித்தடத்துல இருக்கற பெரிய லே-அவுட் பக்கத்துல மட்டும், அரை கிலோ மீட்டர் துாரத்துக்கு, அந்த லே-அவுட் காரங்களே தரமா ரோடு போட்டிருக்காங்க. அந்த வழியில போகற மக்கள், நம்ம அரசாங்கமும் இந்த மாதிரி ரோடு போட்டா நல்லா இருக்கும்ணு பேசிக்கறாங்கனு ஒருத்தரு சொன்னாரு.

அதுக்கு இன்னொருத்தர், அதெல்லாம் நடக்காதுப்பா, தனியார் லே-அவுட்ல இடம் விக்கணும்னு, இரு வழிப்பாதை போல அகலமா, நல்ல தரமா ரோடு போட்டிருக்காங்க. ஆனா, அரசாங்கம் போடுற ரோட்டுல வண்டியே ஓட்ட முடியாது. டெண்டர் எடுக்கறவங்க, அங்க கொடுத்து, இங்க கொடுத்து, அவங்க பாக்கெட்டுல போட்டது போக, மீதி காசுக்கு கடமைக்கு ரோடு போடுறாங்கனு, சொன்னாரு.

'கரன்சி'ய காட்டுனா தான் 'கரன்ட்' வரும்


பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்துல இருந்து வெளியே வந்த நண்பரை, பஸ் ஸ்டாண்டில் 'டிராப்' செய்தேன். 'மின்வாரியம் தனியார் மயமாயிட்டா நல்லாயிருக்கும். இங்க, எதெதுக்கு, எத்தனை பேருக்கு காசு கொடுக்கறதுனு' அதிருப்தியில புலம்பினார். என்ன நடந்ததுனு விசாரிச்சேன்.

மின் நுகர்வோர் வசதிக்காக பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில மின் வாரிய அலுவலகங்கள் செயல்படுது. மின் கட்டணம் வசூல், புதுசா மின் இணைப்பு, மின் மீட்டர் மாற்றி அமைத்தல்னு, மின்சாரம் சம்பந்தமான வேலைகள் நடக்குது.

ஆனா, சில அதிகாரிகள் மின் இணைப்புக்கு அரசு நிர்ணயித்த தொகையை காட்டிலும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கறாங்க. வீட்டுல இருக்கற மின் மீட்டரை இடமாற்றம் செய்ய 241 ரூபா மட்டுமே செலுத்தினா போதும், ஆனா, மூவாயிரம் ரூபா கேட்கறாங்க. அதிலும் 'இ-சேவை' மையத்துல ஆன்லைன் வழியா விண்ணப்பித்தாலும், அதிகாரிய பாத்து தனி 'கவர்' கொடுக்க வேண்டியிருக்கு.

புது கனெக் ஷன் வாங்கணும்னா, அதிகாரியதனியா கவனிக்கணும், மின் மீட்டர் பொருத்தறப்ப அவங்கள தனியா கவனிக்கணும். அதிலும், புதுசா கம்பம் போட வேண்டியிருந்தா, ஆளப்பொறுத்து 20 ஆயிரம் வரைக்கும் வசூலிக்கறாங்க. லைன் பிரச்னைனு போன் பண்ணிட்டா, 'கரன்சி'யை கண்ணுல காட்டுலைனா வீட்டுக்கு 'கரன்ட்' வராதுங்கற கதையா இருந்து. இப்படி இருக்கறதுக்கு, தனியார் மயமாக்கிட்டா நல்லது தானேனு, சொன்னாரு.

டூர் வர்றவங்கள கதிகலங்க வைக்கறாங்க!


வால்பாறைக்கு வர்ற டூரிஸ்ட் கிட்ட காட்டேஜ்காரங்க பணத்தை கறக்கறாங்கனு, இரு இளைஞர்கள் பஸ் ஸ்டாண்டில் பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன மேட்டர்னு கவனித்தேன்.

வால்பாறைக்கு டூரிஸ்ட்காரங்க அதிகம் வர்றதால, காட்டேஜ் அதிகமா கட்டியிருக்காங்க. இது பத்தாம வி.ஜ.பி.,க்கள் தங்கறதுக்கு, எஸ்டேட் பகுதியில 'ரிசார்ட்' இருக்கு. ரிசார்ட்டுக்கு வர்ற வி.ஜ.பி.,ங்க, ஆன்லைன்ல புக்கிங் செய்து, ராத்திரியோட ராத்திரியா வந்து தங்கிட்டு போறாங்க.

டூரிஸ்ட்காரங்க அதிகமா வர்றதால, காட்டேஜ்கள்ல 'ரேட்' கண்ணா பிண்ணான்னு ஏத்திட்டாங்க. அதிலும், 'லீவு' நாள்ல வர்றங்க, ஒரு நாள் தங்கறதுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கட்டணம் வசூலிக்கறாங்க. ஊட்டி, கொடைக்கானல் அளவுக்கு வால்பாறையிலும் கட்டணம் வசூலிக்கறாங்க.

ராத்திரில பாரஸ்ட்டுக்குள்ள கூட்டிட்டு போய், அட்வஞ்சர் காட்டுறதா 'பர்ஸ்'சை காலி பண்ணிடுறாங்களாம். இப்படியே போச்சுனா, வால்பாறைக்கு யாரும் டூர் வரமாட்டாங்க.

இங்க இருக்கற எந்த காட்டேஜ்க்கும் முறையா லைசென்ஸ் இல்லையாம். எல்லா கட்டடமும் விதிமுறை மீறி கட்டியிருக்காங்க. பல காட்டேஜ்க்கு கட்டட அனுமதியே இல்லையாம். எஸ்டேட் பகுதியில யானை வழித்தடத்த ஆக்கிரமிச்சு ரிசார்ட் கட்டியிருக்காங்க. அதனால, அரசுத்துறை அதிகாரிகளும் பாக்கெட்டை நிரப்பிக்கறாங்க.

துாய்மை பணிக்கு சம்பளம் கொடுங்க!


உடுமலையில வாக்கிங் போயிட்டு இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரெண்டு பேர், 'இப்படியே போச்சுன, எப்படிங்க நிர்வாகம் பண்ண முடியும்னு' பேசிக்கிட்டாங்க. என்ன பிரச்னைனு கவனித்தேன்.

ஊராட்சில அரசு பள்ளிகளை, கூட்டி சுத்தம் செய்ய ஆள் கொடுக்கறாங்க. அவங்களுக்கு, ஒன்றிய நிர்வாகம் மூலமாக ஊதியம் கொடுக்கறாங்க. அவங்களுக்கு, மாசத்துக்கு ஆயிரம் ரூபா தான் சம்பளமா கொடுக்கறாங்க. இன்னைக்கு, ஆயிரம் ரூபா இருந்தா நொடியில செலவாயிடும். விலைவாசி அந்தளவுக்கு உயர்ந்திருக்கு.

சரி, அந்த பணத்தையாவது மாசமானா ஒழுங்கா கொடுக்கறாங்களா, அதுவும் இல்ல. இந்த கல்வியாண்டுல அரையாண்டு தேர்வு கூட வந்திருச்சு, ஆனா, துாய்மை பணியாளர்களுக்கு இன்னும் சம்பளம் வரல.

நாமலும் ஊரக வளர்ச்சி துறையில கேட்டு பாத்தாச்சு. ஒன்னும் வேலைக்கு ஆகல. இப்படி ஒரு பிரச்னை இருக்கறதையே கல்வித்துறையில கண்டுக்க மாட்டீங்கறாங்க.

அரசு பள்ளிகள் சுத்தமா இருக்கணும்னு மட்டும் கல்வித்துறை அதிகாரிக ஒவ்வொரு மீட்டீங்ளயும், ஆய்வுக்கு வரப்போவும் சொல்றாங்க. ஆனா, சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் வரல, ஒன்றிய நிர்வாகத்துல என்னனு கேளுங்கனு சொன்னா, அது எங்க பொறுப்பு இல்லனு நழுவுறாங்கனு, பேசிக்கிட்டாங்க.

காந்திநகருல ரிசர்வ் சைட் கபளீகரம்


உடுமலை, காந்திநகர்-2 வீட்டுமனை பகுதியில், நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். 'எங்க ஏரியா ரிசர்வ் சைட்கள எப்படியாவது காப்பாத்துங்கனு' கோரிக்கையோடு பேச துவங்கினார். என்ன நடந்ததுனு விசாரிச்சேன்.

காந்திநகர்-2 வீட்டுமனை, 55 ஏக்கர்ல அமைச்சாங்க. வீட்டு வசதி சங்கம், 5.5 ஏக்கர் நிலத்தை ரிசர்வ் சைட் ஆக ஒதுக்கீடு செய்து, பெரியகோட்டை ஊராட்சி வசம் ஒப்படைச்சது. முறைகேடு ஆவணங்கள் பயன்படுத்தி, பூங்கா ஒதுக்கீட்டு நிலத்தை, மீண்டும் மனையா மாற்றி, 35க்கும் மேற்பட்ட சைட்களா பிரித்து வித்துட்டாங்க. இதுல, 50 கோடி ரூபா மதிப்புள்ள நிலத்தை சைட்டா மாத்தி முறைகேடு பண்ணிட்டாங்க.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் வரை புகார் பண்ணிட்டோம். உடுமலையில இருக்கற, ஆளும்கட்சி தரப்புல, அதனை அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ், மனையாக அங்கீகரிக்க, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வாயிலாக முயற்சி பண்ணுறாங்க.

இங்க வசிக்கற மக்களுக்கு, பூங்கா, விளையாட்டு மைதானம், பொது ஒதுக்கீட்டு நிலம் இல்லாமல், மனையாக மாத்தி கோடிக்கணக்குல சுருட்ட முயற்சி நடக்குது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஆய்வு பண்ணி, மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பாதுகாக்கணும்னு விபரத்தை சொன்னாரு.

கால்வாய் கணக்குல பல லட்சம் கையாடல்!


பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலர், 'ஒன்னுக்கு நாலு மடங்கா செலவு கணக்கு காட்டுறாங்கனு,' பொடி வைத்து பேசினர். என்னனு விசாரித்தேன்.

பாசனத்துக்கு நீர் திறக்கறதுக்கு முன்னாடி, பி.ஏ.பி., கால்வாய்கள துார்வாரணும்னு அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அதனால, ஊராட்சி சார்பில, நுாறு நாள் வேலை திட்டத்துல, துார்வாரப்படும்னு சொன்னாங்க. ஆனா, கால்வாய முறையா துார்வாருல.

குறைந்த ஆட்கள அனுப்பி அரைகுறை வேலை செய்துட்டு, பல மடங்கு கணக்கு எழுதி கொள்ளையடிக்கறாங்க. ஒரு ஊராட்சியில மட்டும், 60 ஆயிரம் ரூபா அளவுக்கான வேலைக்கு, அதிக ஆட்கள நியமிச்சதா கணக்கு காட்டி, ரெண்டு லட்சம் ரூபாய ஆட்டையபோட்டுட்டாங்க.

கால்வாயில சில இடத்துல, முறையா துார்வாராம, காலதாமதப்படுத்தி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கற நேரத்துல ஒப்படைக்கல.

இதெல்லாம், அதிகாரிக முறையா கண்காணிக்கணும்னு சப்-கலெக்டரிடம் புகார் பண்ணியிருக்கோம். இந்த மாதிரி எல்லாம் நடக்காம இருக்கணும்னா, பாசன சபைக்கு நிதி ஒதுக்கினா, தண்ணீ திறக்கறதுக்கு முன்னாடி, கால்வாய துார்வாரி சுத்தப்படுதிடுவோம். இதுக்கெல்லாம், அதிகாரிக தான் நடவடிக்கை எடுக்கணும்னு, சொன்னாங்க.

பறக்குது டிப்பர் லாரி; காலியாகுது கனிமவளம்

'எல்லா பிரச்னையிலும் மக்கள திசை திருப்பி விடறதுல மட்டும் அதிகாரிங்க தெளிவா இருக்கறாங்கனு,' பெதப்பம்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருவர் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.'அட பெதப்பம்பட்டி வழியா பொழுதின்னிக்கும் பெரிய, பெரிய டிப்பர் லாரிகள போயிட்டே இருக்கு. இத்தன கல்லு, ஜல்லி, மண்ணுன்னு கனிம வளங்கள் அத்தனையும், எங்கதா போகுது,' என ஒருவர் கேட்டார்.மற்றொருவர், 'அட இதெல்லாம், உள்ளூர் வேலைக்கு போகல; கேரளாவுக்கு கொண்டு போறங்க. இங்கிருக்கிற குவாரியில இருந்து எந்த ரூல்சையும் மதிக்காம, வருஷம் முழுக்கா கனிமவளங்கள் போயிட்டேதான் இருக்கு,' என்றார்.இங்கிருக்கற அதிகாரிங்க கண்ணுல ஒரு நாள் கூடவா இந்த லாரிக தட்டுப்படல? இதை கண்டிச்சு போராட்டம் பண்றதா விவசாயிங்க அறிவிச்சதும், நாலு லாரிகள குடிமங்கலம் போலீசார் பிடிச்சாங்க. அப்புறம் அதிக லோடு ஏத்துனதா அபராதம் போட்டாங்க.இந்த நடவடிக்கைக்கு பிறகு, லாரிக குறைஞ்சிரும் அப்படின்னு பார்த்தா, மறுபடியும் நுாற்றுக்கணக்கான லாரிக போயிட்டேதான் இருக்கு.எல்லா புகாருக்கும், கண்துடைப்பா நடவடிக்கை எடுத்து திசை திருப்பற அதிகாரிங்க, அதுக்கு ஆதரவு கொடுக்கற கட்சிக்காரங்க இருக்கறவரைக்கும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது.ஏன்னா, அரசியல்வாதிகள், அதிகாரிகள் இதனால பலனடையறாங்க. நம்ம ஊரு கனிமவளம் தான் கொள்ளை போகுது. இப்பவே, நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கு போயிருச்சு. இனி என்னென்ன நடக்குமோனு, சொல்லி உரையாடல முடிச்சுட்டு, பஸ் ஏறி ஊருக்கு கிளம்பினாங்க.








      Dinamalar
      Follow us