sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : டிச 23, 2024 05:15 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைக பாதுகாப்பு முக்கியமில்லையா?


உடுமலை, பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில படிக்கிற குழந்தைகள அழைச்சுட்டு போகற பெற்றோர், பள்ளி இருக்கற சூழல பாத்து கண்ணீர் வடிக்காத குறையா புலம்பிட்டு போனாங்க. அவங்க கிட்ட விசாரிச்சேன்.

இந்த அரசு பள்ளிய நம்பிதான் குழந்தைகள அனுப்புறோம். பள்ளி சுத்தமா, பாதுகாப்பா இருந்தா போதுமா. என்ட்ரன்ஸ் பக்கத்துலேயே 'குடி' போதையில உருண்டுட்டு கிடக்கறாங்க. இதைத்தான் குழந்தைக தினமும் பாத்துட்டு வர்றாங்க.

கையில கிளாஸ்சோட பள்ளிக்கு அருகிலேயே நிற்கறாங்க. அதை பாத்துட்டு பள்ளியில இருந்து வர்ற குழந்தைக, அந்த பழக்கத்த பழகாம இருக்கணும். இதுக்கெல்லாம், பள்ளிக்கு பக்கத்துல இருக்கிற டாஸ்மாக் மதுக்கடைதான் காரணம்.

பள்ளியில பலமுறை புகார் கொடுத்தாச்சு. பள்ளி நிர்வாகமும் பலமுறை புகார் பதிவு செஞ்சுட்டோம்னு சொல்றாங்க. இங்க, ஒரு மத்திய அரசு பள்ளி, இரண்டு மாநில அரசு பள்ளி இருக்கு.

ஆனாலும், 'குடி'மகன்கள போலீசார் கண்டுகிறதில்ல. இதுக்கு ஒரே தீர்வு டாஸ்மாக் மதுக்கடைய இங்கிருந்து அகற்றணும். ஆளுங்கட்சி முக்கிய பிரமுகரோட 'பாக்கெட்' நிரம்பணுமா, பள்ளி குழந்தைகளோட பாதுகாப்பு முக்கியமானு அவங்க தான் முடிவு பண்ணணும்னு சொன்னாங்க.

வருமானத்துல குறி; வசதி எதுவும் இல்ல!


சோமவாரப்பட்டி பஸ் ஸ்டாப்பில் பெரியவர்கள் இருவர், 'இந்த வருஷமாவது மக்களுக்கு ஏதாவது செய்யறாங்களான்னு பார்ப்போம்னு,' மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேசியதிலிருந்து...

வருஷா வருஷம் நம்ம மாலகோவில் (ஆல்கொண்டமால்)நோம்பிக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வந்துட்டு போறாங்க. ஆனா, அவங்களுக்கு தேவையான வசதி எதும் செய்யறது இல்ல. கோவிலுக்கு முன்னாடி ராட்டிணம், கடை போடறதுக்கு ஏலம் விட்டு, பல லட்ச ரூபா வருமானமும் வருது.

இதுல, போதிய பாதுகாப்பு இல்லாத உபகரணங்களையும், விளையாட்டுகளையும், எப்படி அனுமதிக்கிறாங்கன்னு தெரியல. ஆளுங்கட்சிக்காரங்க தான் ஏலம் எடுக்கறாங்க; அதிகாரிக அவங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. ஏலத்தையும் வெளிப்படையா அறிவிக்கிறது இல்ல. எந்த வசதியும் செஞ்சு கொடுக்கறதும் இல்ல.

வேற வழியில்லாம, துாரத்துல இருந்து வர்றவங்க சிரமப்பட்டு திரும்பி போறாங்க. கோவிலுக்கு மாடு, கன்னு காணிக்கையா கொடுக்கறதுக்கும் கட்டணம் வசூலிக்கிறாங்க.

ஆனா, கோசாலை அமைக்காம, ஏதோ திட்டத்துல, பயனாளிகளுக்கு மாடுகள கொடுத்தறாங்க. சரி இதையெல்லாம் நாம பேசி என்ன நடக்க போகுது. எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான். மார்கழி குளிரு, வாட்டி எடுக்குது இடத்தை காலி செய்வோம்னு பேசிக்கிட்டாங்க.

பொறுப்பு மாறினதும் பணிகள் நிறுத்தம்


வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் அருகே, பேக்கரியில் பேசிக்கொண்டிருந்த இருவர், 'நகராட்சில பல கோடி ரூபா நிதி இருந்தும் என்ன பிரயோஜனம்,' என பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேச்சை கவனித்தேன்.

வால்பாறை நகராட்சில, உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறம், கொஞ்ச காலத்துக்கு வளர்ச்சிப்பணி நடந்துச்சு. அதுக்கப்புறம், தி.மு.க., கட்சிக்குள்ள இருக்கற கோஷ்டிபூசலால் எந்த வளர்ச்சி பணியும் நடக்கல. ஒரு கோஷ்டி பணிய துவங்கும் போது, இன்னொரு கோஷ்டி முறைகேடு நடக்கறதா பணிய நிறுத்தறாங்க.

தி.மு.க., நகர செயலாளர் தலையிட்டு, அமைச்சர்கள் முத்துசாமி, நேரு ஆகியோரை சந்தித்து பேசினாரு. அதுக்கப்புறம் வார்டுல வளர்ச்சி பணி நடந்துச்சு.

இப்ப, மறுபடியும் பணி எதுவும் நடக்கறதில்ல. இப்படியே போன வார்டுக்குள்ள போக முடியாது, ஓட்டும் கேட்க முடியாதுனு தி.மு.க., கவுன்சிலர்களே புலம்புறாங்க.

மாவட்ட அமைச்சரா செந்தில்பாலாஜி மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரோட பார்வை நகராட்சி மீது பட்டால் மட்டுமே, வளர்ச்சிப்பணி நடக்கும்னு கட்சிக்காரங்களே சொல்றாங்க. மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாறியதும் வளர்ச்சி பணிக்கு சிக்கல் வந்திருச்சுனு அதிருப்தில இருக்காங்கனு, பேசிக்கிட்டாங்க.

கல்வித்துறையில 'கவனிப்பு' புகார்


பொள்ளாச்சி கல்வித்துறை அலுவலகத்துக்கு வந்த தலைமை ஆசிரியர்கள் சிலர் சோகமாக இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.

அரசு பள்ளிகள்ல, ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ, மாநில தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்துறாங்க. பள்ளிக்கு இரண்டு பேர் வந்து, ஆசிரியர்கள், தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட மற்றும் பள்ளி அளவில் பராமரிக்கப்படும் ஆவணங்கள சரிபார்க்கறாங்க.

இதுக்காக, பள்ளிகள் தோறும், அவங்களுக்கு, 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபா 'கவனிப்பு' செய்யணும். அவர்களும் உள்ளதை உள்ளபடி பதிவிட்டு கையெழுத்து போடுவாங்க. அவங்கள 'கவனிப்பு' செய்யலைனா, ஆவணங்களில் ஏதேனும் ஒரு சிறு தவறை சுட்டிக் காட்டி சென்னைக்கு வரவழைச்சிருவாங்க. அதுக்கு தனியா அலையணும். அதனால, அவங்க கேட்கற பணத்தை கொடுக்க வேண்டியிருக்கு.

'லஞ்சத்துக்கு' எதிராக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தறோம். ஆனால், கருவூலகம் முதல், பள்ளிக்கு 'ஆடிட்' பண்ண வரும் கணக்காளர் வரையும் அனைவருக்கும் 'கவனிப்பு' செய்ய வேண்டியிருக்கு. இதுக்கெல்லாம் எப்ப தீர்வு கிடைக்கும்னு தெரியலனு, புலம்பினாங்க.

கோதவாடி குளத்த கண்டுக்காத எம்.பி.,!


கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுல நண்பரை சந்தித்தேன். அங்க, தி.மு.க.,காரங்க ரெண்டு பேர் பஸ்சுக்காக காத்திட்டு இருந்தாங்க. அவங்க உரையாடலை கவனித்தேன்.

பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பல பகுதிக்கு போய், நலத்திட்ட உதவி, புதிய திட்டங்களை எல்லாம் துவக்கி வைக்கிறாரு. அவரு போகற இடமெல்லாம், கட்சிக்காரங்க, பொதுமக்கள் மனு கொடுக்கறாங்க.

இதுல சில மனுவ பார்த்துட்டு என்ன பிரச்னைனு கேட்டு சரி பண்றாரு. இதுல, கோதவாடி குளத்துக்கு தண்ணி வேணும்னு மனு கொடுத்தாங்க. அந்த மனுவை மட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாரு.

பழைய எம்.பி., சண்முகசுந்தரம் முயற்சி எடுத்து ஒரு தடவை கோதவாடி குளத்துக்கு தண்ணீ கொண்டு வந்தாரு. ஆனா, இப்ப குளத்துக்கு தண்ணீ கொண்டு வர்றதுக்கு சாத்தியக்கூறுகள் இருந்துமே, எம்.பி., காது கொடுத்து கேட்க மாட்டேங்கறாரு. ஒருவேளை தண்ணீ கொண்டு வர்றது எம்.பி.,க்கு கஷ்டமா இருக்குமோ என்னவோனு சொல்லிட்டு இருந்தப்ப, பஸ் வந்ததும் அங்கிருந்து கிளம்பிட்டாங்க.

இ.பி.எப்., பணத்தை யாரு செலுத்துவாங்க!


உடுமலை நகராட்சி ஆபீஸ்ல, ஒப்பந்த பணியாளர்கள் ரெண்டு பேர், எங்களோட இ.பி.எப்., பணத்த யாரு செலுத்துவாங்கனு தெரியலைனு புகார் சொன்னாங்க. என்ன பிரச்னைனு அவங்க கிட்ட விசாரிச்சேன். அவங்க சொன்னதில் இருந்து...

நகராட்சியில, தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலி அடிப்படைல, குடிநீர் சுத்திகரிப்பு மையம், குடிநீர் வினியோக பணி, பாதாள சாக்கடை திட்டத்துல, 60 பேரு வேலை செய்யறாங்க.

இதுக்கு டெண்டர் எடுக்கும் நபர்கள், தொழிலாளர்கள பணிக்கு அமர்த்தும் போது, அவங்களுக்கு, வருங்கால வைப்பு நிதிக்கு, மாசத்துக்கு, 1,500 முதல் இரண்டாயிரம் ஆயிரம் ரூபாய் வரை செலுத்தணும்.

டெண்டர் எடுக்கும் போதே, விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பணிக்கான தொகை விடுவிக்கும் போது, அதை நகராட்சி அதிகாரிக உறுதி செய்யணும். அல்லது, தொழிலாளர்களுக்குரிய தொகையை பிடித்தம் செய்து, இ.பி.எப்., கணக்குக்கு செலுத்தணும்.

இந்த தொகைய செலுத்தாததால, பல லட்சம் ரூபா செலுத்தணும்னு, நகராட்சி நிர்வாகத்திற்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துல இருந்து நோட்டீஸ் வந்திருக்கு. இதனால, பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கு.

கடந்த சில ஆண்டுகளாக, டெண்டர் எடுக்கும் நபர்கள், இ.பி.எப்.,க்கு உரிய தொகை செலுத்தாம, 'பில்' போட்டு வாங்கிட்டு இருக்காங்க. இதுல, பல லட்சம் ரூபா முறைகேடு நடந்திருக்கு. நகராட்சியில இருக்கற ஒரு சில அதிகாரிகளுக்கு, இந்த முறைகேட்டுல தொடர்பிருக்குனு, சொன்னாங்க.

'குடி'மகன்களுக்கு காலையிலேயே 'சரக்கு' கிடைக்குது

பொள்ளாச்சி ஜோதிநகர் ரோட்டில், நண்பருடன் 'வாக்கிங்' சென்றேன். அப்போது அவர், 'இவங்களுக்கு நேர காலமே இல்ல; எங்கிருந்து 'சரக்கு' வாங்கிட்டு வர்றாங்களோ' என, கோபத்துடன் பேச துவங்கினார். 'வாக்கிங்' போயிட்டே அவர் சொன்ன விஷயங்களை நானும் உள்வாங்கினேன்.பொள்ளாச்சியில், 'குடி'மகன்கள் தொல்லை தாங்க முடியல; எப்ப பார்த்தாலும், குடிச்சுட்டு ரகளை பண்ணுறாங்க. மதியம், 12:00 மணிக்கு தான் கடை திறக்கறதா சொல்றாங்க; ஆனா காலையில, ஆறு மணிக்கே 'சரக்கு' பாட்டிலோட சுத்துறாங்க.அதுவும் ஜோதிநகருல மின்கம்பங்களை அடுக்கி வச்சுருக்கற இடத்த தான், 'திறந்தவெளி பார்' ஆக பயன்படுத்துறாங்க. காலை, மாலை, இரவு என, எப்ப பார்த்தாலும், 'குடி'மகன்கள் நடமாட்டம் இருந்துட்டே இருக்குது. குடியிருப்பு இருக்குனு கூட பார்க்காம, மது குடிச்சுட்டு பாட்டிலை உடைச்சு வீசிட்டு போறாங்க. உணவு பொட்டலத்தை எல்லாம் அங்கேயே போட்டுட்டு போறாங்க.ஒரு சிலர் குடிச்சுட்டு அங்கேயே, அரைகுறை ஆடையோட படுத்துக்கிடக்கறாங்க. அது மட்டுமல்லாம 'வாக்கிங்' போற மைதானத்தையும் விடுறது இல்ல; இங்கயும் குடிச்சுட்டு பாட்டிலை போடுறாங்க. இதனால, 'வாக்கிங்' போகறவங்க மட்டுமில்லாம, அங்க மேய்ச்சலுக்கு வர்ற கால்நடைகளும் பாதிக்குது. இதெல்லாம் தடுக்கணும்னா, போலீசார் களமிறங்கணும்னு சொல்லி முடித்தார்.








      Dinamalar
      Follow us