/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கேரளாவுல சுட்டு கொல்லுறாங்கஇங்கு கூண்டு வச்சு பிடிக்கறாங்க
/
ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கேரளாவுல சுட்டு கொல்லுறாங்கஇங்கு கூண்டு வச்சு பிடிக்கறாங்க
ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கேரளாவுல சுட்டு கொல்லுறாங்கஇங்கு கூண்டு வச்சு பிடிக்கறாங்க
ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கேரளாவுல சுட்டு கொல்லுறாங்கஇங்கு கூண்டு வச்சு பிடிக்கறாங்க
ADDED : நவ 02, 2025 09:55 PM
கேரளாவுல சுட்டு கொல்லுறாங்கஇங்கு கூண்டு வச்சு பிடிக்கறாங்க பொள்ளாச்சியில நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு செய்தி சேகரிக்க போயிருந்தேன். அப்போ, விவசாயிகள் காரசாரமா பேசிக்கிட்டிருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
காட்டுப்பன்றிக விளை பயிர்கள மிகவும் நாசப்படுத்துதுங்க, நெற்பயிர்கள் எல்லாம் தோண்டுவதால, கஷ்டப்பட்டது வீணாக போகிறது. காட்டுப்பன்றியை பிடிக்க கூறினாலும், வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்ல.
இதை பண்ணலாம், அதை பண்ணலாம்னு ஐடியா மட்டுமே கொடுக்கிறாங்க. வேறு எதுவும் செய்வதில்ல. தோட்டத்துல கொண்டு வந்து கூண்டு வச்சு, காட்டுப்பன்றிய பிடிக்க முயற்சி பண்ணிணாங்க. ஆனா, கூண்டுல இருந்த உணவை மட்டும் சாப்பிட்டுட்டு, காட்டுப்பன்னி எஸ்கேப் ஆகிடுச்சு.
வனத்துல இருந்து வந்த ஒரு நரியும் சேர்ந்து காட்டுபன்றிக கூட சுத்திக்கிட்டு இருக்கு. அது கோழிய பிடிச்சு சாப்பிடுது. இதையெல்லாம் எங்கே போய் சொல்றதுனு தெரியல.
கேரள மாநிலத்துல காட்டுப்பன்றிகள துப்பாக்கியால சுட்டு கொல்றாங்க. இங்க, காட்டுப்பன்றி எப்ப வருதுனு சொல்லுங்க, நாங்க வந்து அதை பிடிச்சு 'பாரஸ்ட்ல' விடுறோம்னு வனத்துறையினர் வாய்ஜாலம் பேசுறாங்க. கேரள வனத்துறை மாதிரி இங்கேயும் உறுதியான முடிவு எடுத்து செயல்படுத்தணும். அப்ப தான் விவசாயத்த பாதுகாக்க முடியும்னு சொன்னாங்க.
தங்கு தடையில்லாம 'சரக்கு' விக்கறாங்கமறுபடியும் போலீஸ் சாட்டைய சுழற்றுமா கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். நம்ம ஊருல, எந்த தங்கு தடையில்லாம 'சரக்கு' கிடைக்குனு, சரவெடியாய் வெடித்தார். என்ன விஷயம்னு அவரே பேசத் துவங்கினார்.
கிணத்துக்கடவு ஏரியாவுல காலை நேரத்திலேயே 'சரக்கு' சில்லிங் விற்பனை அமோகமா நடந்துச்சு. 'சில்லிங்' ஓட்றவங்க மேல போலீசார் கேஸ் போட துவங்கினாங்க. அதனால, மது சில்லிங் விற்பனை கொஞ்சம் குறைந்தது.
ஆனா இப்போ, பழையபடி காலை நேரத்திலேயே 'சரக்கு' விற்க துவங்கிட்டாங்க. குறிப்பா சிக்கலாம்பாளையம் பகுதியில இருக்கிற டாஸ்மாக் மதுக்கடை பக்கத்துல, 'சில்லிங்' வியாபாரம் படுஜோரா நடக்குது.
என்னன்னு பார்த்தா, ஒரு நாள் முன்னாடியே ராத்திரி நேரத்துல டாஸ்மாக் மதுக்கடைல இருந்து 'சரக்கு' வாங்கி பதுக்கி வச்சுக்கறாங்க. கடை திறக்காத நேரத்துல, பாட்டிலுக்கு 50 ரூபா அதிகமா விலை வச்சு விக்கறாங்க.
இதனால, நம்ம ஊருல உடல் உழைப்பு வேலைக்கு போகற ஆளுக எல்லாரும், காலையிலேயே அங்க போயி, 'சரக்கு' வாங்கி குடிக்கறாங்க. மறுபடியும் போலீசார் களமிறங்கினா தான், சில்லிங் விக்கறத தடுக்க முடியும்னு, சொன்னார்.
காட்டுக்குள்ள அத்துமீறி போறாங்கஅதிகாரிக ராத்திரி ரவுண்ட்ஸ் போங்க வால்பாறைக்கு வரும் டூரிஸ்ட்டுகள் ராத்திரில அத்துமீறி காட்டுக்குள் போறாங்கனு, பேக்கரியில் வாலிபர்கள் பேசிக்கொண்டனர். அவர்களின் உரையாடலை கவனிச்சேன்.
ஆனைமலை புலிகள் காப்பக கட்டுப்பாட்டுல வால்பாறை இருக்கு. இங்க வர்ற டூரிஸ்ட்டுகள் தங்கும் விடுதியில தங்கி, ராத்திரில வனவிலங்குகள பார்க்கறதுக்கு ஆர்வம் காட்டுறாங்க.
அவங்க கிட்ட ஒரு தொகையை வசூலிச்சுட்டு, வனவிலங்குகள பார்க்கலாம்னு, காட்டுக்குள்ள வாகனங்கள்ல அழைச்சிட்டு போறாங்க. எஸ்டேட் பகுதியில செயல்படுற 'ரிசார்ட்'கள்ல தங்கும் டூரிஸ்ட்டுகள வன விலங்குகள் நடமாடும் பகுதிக்கு ராத்திரில அத்துமீறி அழைச்சிட்டு போறாங்க.
வனத்துறை ஊழியர்கள் சிலரை கைக்குள்ள போட்டுட்டு, 'கொடுக்க' வேண்டியத கொடுக்கறாங்க. அப்புறம் காட்டுக்குள்ள இஷ்டம் போல வாகனத்துல போறாங்க. ராத்திரில யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு நடமாடுற இடத்துக்கெல்லாம் அழைச்சிட்டு போறாங்க.
போகற இடத்துல வனவிலங்கு தாக்கி யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டா யார் பொறுப்புனு தெரியல. காட்டுக்குள்ள இருக்கற விலங்குகளை வேட்டையாடினா யார் தடுப்பாங்கனு தெரியல. இந்த அத்துமீறல கட்டுப்படுத்தலைனா, அசம்பாவிதம் ஏற்படும்.
வனத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே கம்முன்னு இருக்காங்க. வனத்துறையில கைநீட்டுவோரை கண்டுபிடிக்கவும், அத்துமீறல தடுக்கவும், உயர்அதிகாரிக ராத்திரில 'ரவுண்ட்ஸ்' போகணும்னு, பேசிக்கிட்டாங்க.
கனிமவளம் கடத்தல் விவகாரம்தேர்தலில் எதிரொலிக்க போகுது! உடுமலையில், தாலுகா ஆபீஸ் அருகே விவசாயிகள் கூட்டமாக நின்று காரசாரமாக பேசிக்கொண்டிருந்தனர். என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
உடுமலை சுற்றுப்பகுதியில இருக்கற குளங்களில் கிராவல் மண் கடத்தல் அதிகமா நடக்குது. கேரளாவுக்கும் விதிமுறைகளை மீறி கனிமவளத்த கடத்தறாங்க. விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டம் நடத்தினா, கொஞ்ச நாளைக்கு கனிமவள கடத்தல் நடக்கறதில்ல.
இப்ப, மண் கடத்தல் கும்பல் புது நடைமுறைய பின்பற்றாங்க. கடத்தலுக்கு எதிரா போராடுறவங்க மீது போலீசுல புகார் கொடுத்து, முக்கிய பிரிவுகளில் எப்.ஐ.ஆர்., போட்டு போராட்டத்த முடக்க காய் நகர்த்திட்டு இருக்காங்க.
இந்த தகவல் தெரிஞ்சதும், விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் பாதுகாப்பு கேட்டு முதல்வருக்கும், திருப்பூர் கலெக்டருக்கும் மனு அனுப்பியிருக்காங்க. ஆனா, விவசாயிகள் அனுப்பிய மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்ல. விரக்தியில இருக்கற விவசாயிகள் உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில ஒருங்கிணைப்பு குழு துவங்கியிருக்கோம்.
கடந்த நாலு வருஷத்துல நடந்த கனிமவள கொள்ளை குறித்த துல்லியமான விபரங்களை சேகரிச்சிட்டு இருக்கோம். இதை அடிப்படையாக வச்சு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த போறோம்.
கனிமவள கடத்தலை தடுக்காவிட்டாலும், இப்பிரச்னைக்காக போராடுறவங்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கொடுக்கும்னு எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், இந்த பிரச்னை வரும் தேர்தலில் இரு தொகுதிகளிலும் தி.மு.க.,வுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தும்னு, விவரமா சொன்னாங்க.

