sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : ஜூன் 01, 2025 11:18 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதவி உயர்வே வேண்டாங்கறஅளவுக்கு வெறுப்பாயிட்டாங்க!


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, புதிய கல்வியாண்டுக்கான நலத்திட்ட பொருட்கள் வினியோகம் ஒவ்வொரு வட்டாரத்திலும் துவங்கியுள்ளது. இது குறித்து விசாரிக்கச்சென்ற போது, வட்டார கல்வி அலுவலர்கள் மாறுதல் குறித்து, அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர். என்ன நடந்ததுனு விசாரிச்சேன்.

சமீபத்தில் வட்டார கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மாநில அளவுல நடந்துச்சு. இதுல என்ன விசேஷம்னா, ஒருமுறை அந்த அலுவலர் ஒரு வட்டாரத்துல பணி செஞ்சிருந்தா, மீண்டும் அதே வட்டாரத்துக்கு எப்போதுமே போக முடியாதுனு, புதிய நடைமுறைய நடப்பாண்டுல இருந்து செயல்படுத்தியிருக்காங்க.

இதனால, பலரும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்காங்க. குறிப்பா, திருப்பூர் மாவட்டத்துல பணி நிறைவு பெற ஓரிரு ஆண்டுகள் இருக்கிற நிலையில, அவங்களுக்கு தொலைதுார பகுதிகள்ல பணி மாற்றம் வழங்கப்பட்டிருக்கு.

இதுனால, அவங்க பதவி மாறுனாலும் பரவாயில்லனு, மீண்டும் வட்டார கல்வி அலுவலர் பதவியிலிருந்து, பள்ளி ஆசிரியர்களா பணி வாங்கிட்டு வந்திருக்காங்க. பதவி உயர்வே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு வெறுத்து போயிருக்காங்கனு, சொன்னாங்க.

கோடை விழா அம்போ...ஆளும்கட்சியினர் 'அப்செட்'


வால்பாறையில, இந்த ஆண்டும் கோடை விழா நடக்காததால, ஆளும்கட்சிக்காரங்க 'அப்செட்' ஆயிட்டாங்களாம், என, டீக்கடைகளில் இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவங்க உரையாடலை கவனித்தேன்.

சுற்றுலா நகரமான வால்பாறையில, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்துவாங்க. போன வருஷம், லோக்சபா தேர்தல் நடந்ததால, கோடை விழா நடத்தல. இந்த வருஷம் மே மாத கடைசியில கோடை விழா நடத்துவாங்கனு எல்லாரும் எதிர்பார்த்தாங்க.

கடைகள் போட்டு, விளம்பரம் செய்து நாலு காசு சம்பாதிக்கலாம்னு ஆளும்கட்சிக்காரங்களும் எதிர்பார்ப்போட இருந்தாங்க. ஆனா, தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி, அவங்க கனவுல மண்ண போட்டுருச்சு. இதனால, ஆளும்கட்சிக்காரங்க 'அப்செட்' ஆயிட்டாங்க.

இதில, இன்னொரு வேடிக்கை என்னன்னா, கடந்த, 2023ல் நடந்த கோடை விழாவுல கலந்துக்கிட்ட மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி, அதுக்கு அப்புறம் ஜெயிலுக்கு போயிட்டாரு. இப்ப கோடை விழா நடத்தி கலந்துக்கிட்டா, அதே நிலைமை மீண்டும் வந்துருமோனு, விழாவே நடத்தலைனும் பேச்சு அடிபடுது.

எது எப்படியோ, கோடை விழாங்கற சாக்காட்டுல நகராட்சி பணம் ஸ்வாகா செய்யறது தடுக்கப்பட்டிருக்குனு, பேசிக்கிட்டாங்க.

காலி மதுபாட்டிலுக்கு காசு 'நஹி''சைடிஷ்' தான் கொடுப்பாங்களாம்!


நெகமத்தில் உள்ள பைக் சர்வீஸ் சென்டருக்கு, பைக் சரி செய்ய போயிருந்தேன். அப்போ, அங்கு இருந்த இருவர் மதுக்கடை பற்றி சுவாரஸ்யமா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னன்னு கவனித்தேன்.

நெகமம் சுற்று வட்டாரத்துல இருக்கற டாஸ்மாக் மதுபானக்கடையில, முன்பெல்லாம் 'சரக்கு' வாங்கி குடிச்சிட்டு, காலி பாட்டில் கொடுத்தா, பத்து ரூபா திருப்பி தருவாங்க.

ஆனா, இப்பல்லாம் காலி பாட்டில் கொடுத்து,பத்து ரூபா கேட்டா காசெல்லாம் திரும்ப தர முடியாது. வேணும்னா, 'சைடிஷ்' தான் கொடுப்போம். வேணும்னா வாங்கி சாப்பிடு, இல்லைனா இடத்தை காலி பண்ணுனு, டாஸ்மாக் விற்பனையாளர்கள் காறரா சொல்றாங்க.

நெகமம் சுற்று வட்டாரத்துல இருக்கற எந்த டாஸ்மாக் கடையிலயும், இந்த புது ரூல்ஸ் கொண்டு வந்திருக்காங்க.

இத டாஸ்மாக் அதிகாரி கவனிச்சு நடவடிக்கை எடுக்கணும். இதுல, அவங்களுக்கும் பங்கு இருந்தா, கொடுக்கறத வாங்கிட்டு, கம்முனு இருப்பாங்கனு, அந்த 'குடி'மகன்கள் புலம்பி தள்ளினர்.

ஏழு வருஷமா கட்டுன பஸ் ஸ்டாண்டுலஎந்த வசதியும் இல்லைனு புலம்புறாங்க!


உடுமலையில், கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது. விழாவுல பங்கேற்ற, ஆளும்கட்சிக்காரங்க கடுகடுப்பா இருந்தாங்க. என்னனு விசாரிச்சேன்.

இந்த பஸ் ஸ்டாண்ட் ஏழு வருஷமா கட்டப்பட்டு, தற்போது திறக்கப்பட்டாலும், மக்கள் பயன்பாட்டுக்கு முழுசா வரல. உள்ளே சென்று பார்த்தா, வணிக வளாகமும், பஸ்கள் நிற்க 'ரேக்' மட்டும் தான் இருக்கு.

பயணியருக்கு எந்த வசதியும் செய்யல. இருக்கை, காத்திருக்க இடம் இல்ல. மழை, வெயில் அடித்தால், நிற்கவே முடியாது. குடிநீர் வசதி, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான எந்த வசதியும் இல்ல.

தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டிலிருந்து, கூடுதல் பஸ் ஸ்டாண்ட்டுக்கு மக்கள் செல்வதற்கு வழியும் ஏற்படுத்தல. பைபாஸ் ரோட்டில் அதிவேகமாக ரவுண்டானா கடக்கும் வாகனங்களுக்கு இடையே, கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கு மக்கள் நடந்து வர வேண்டியிருக்கு.

மேலும், பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகங்களுக்கு நகராட்சி அதிகாரிக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கல. அதனால, கழிவு நீர் நேரடியாக பஸ் ஸ்டாண்ட்டுக்குள்ள வருது. பஸ் ஸ்டாணட் கட்டி முடிச்சு, ஆறு மாசத்துக்கு மேல, பொக்லைன், கிரேன், லாரிகள், கார், ஆட்டோ 'பார்க்கிங்' ஸ்டாண்டா இருந்துச்சு.

இப்ப, விழா பக்கம் நடந்தாலும், வாகனங்கள் நிறுத்தப்பட்டும், கழிவு நீர் வெளியேறி துர்நாற்றத்தோட இருந்தது. இந்த பஸ் ஸ்டாண்ட் மக்களுக்கு பயன்படாத வணிக வளாகமாக மட்டுமே இருக்கும்னு, ஆளும்கட்சிக்காரங்களே புலம்புறாங்க.

தனியா நடந்து போனா அவ்ளோதான்சுரங்கபாதையில நடக்குது சம்பவம்!


பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்தித்தேன். அப்ப, அவர், இதற்கு ஒரு தீர்வே இல்லையானு, பேச ஆரம்பித்தார். என்னனு விசாரித்தேன்.

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல இருந்து சுரங்கபாதையில செல்லவே பயமா இருக்குது. அங்கு தனியா போறவங்க கிட்ட, கும்பலாக நிற்குறவங்க, அடிச்சு பிடுங்காத குறையாக, பணம், பொருளை எல்லாம் நச்சரிச்சு வாங்குறாங்க. சில சமயம் அருவருப்பா கூட நடந்துக்கறாங்க.

போன வாரம், ஒருத்தரு சுரங்கபாதையில போயிருக்காரு. அங்க இருந்த சிலர், அவரு கிட்ட பர்சை பிடுங்கிட்டு விட்டுட்டாங்க. பணம் இல்லாமல் திணறின அவரு, நண்பரிடம் காசு வாங்கி பஸ்ல போயிருக்காரு.

இந்த மாதிரி சம்பவங்களுக்கு முடிவே இல்லாததால, சுரங்கப்பாதைய பயன்படுத்தவே மக்கள் தயக்கம் காட்டுறாங்க. அவங்கள, போலீசாரும் கட்டுப்படுத்தறதில்லனு, விபரத்த சொன்னார்.

தேர்தல் செலவுக்கு முதலீடு செய்தவங்கஎலக் ஷன் நிதிய எதிர்பார்த்திருக்காங்க!


பொள்ளாச்சியில் ஆளும்கட்சி நண்பரை சந்தித்தேன். வரும் தேர்தல்ல செலவு பண்ணவே பயமா இருக்குனு புலம்ப ஆரம்பித்தார். அவர் கூறியதில் இருந்து...

கடந்த உள்ளாட்சி, லோக்சபா தேர்தல்ல, ஆளும்கட்சி வேட்பாளர ஜெயிக்க வைக்க, நிறைய வேலை பார்த்தோம். ஓட்டுக்கு பணம் கொடுக்க முக்கிய கட்சி நிர்வாகிகள் சிலரை நியமிச்சிருத்தாங்க. அதுமட்டும் இல்லாம, தேர்தல்ல இதர செலவுகள உள்ளூர் நிர்வாகிகள் பார்த்துக்கணும்னு சொன்னாங்க.

தேர்தலுக்கு அப்புறம், வளர்ச்சி பணியில, 10 பர்சன்ட் கமிஷன் வாங்கி, தேர்தலுக்கு செலவு பண்ணின நிர்வாகிகளுக்கு கொடுக்கறதா வாய்மொழியா சொன்னாங்க. அதை நம்பி, பல லட்சத்தை செலவு பண்ணிட்டோம்.

எலக் ஷன் முடிஞ்சதும், சொன்ன வாக்குறுதிய மறந்துட்டாங்க. எல்லா கமிஷனையும் நகர, ஒன்றியம் பதுக்கிட்டாங்க.

இப்ப, சட்டசபை தேர்தலுக்கு சில செலவுகள உள்ளூர் நிர்வாகிக பார்த்துக்கணும். அவங்களுக்கு வேண்டியது அப்புறம் பண்ணிக்கொடுக்கலாம்னு, மேல் மட்டத்துல சொல்லியிருக்காங்க. இந்த கட்சியில யாரையும் நம்ப தயாரில்ல.

எலக் ஷன் செலவுக்கு பணம் கொடுத்தா, ஏற்கனவே செலவு பண்ணின தொகைய எடுத்துட்டு, மீதமிருக்கற தொகைய தான் செலவு செய்யணும்னு முடிவு எடுத்திருக்கோம்னு, சொன்னார்.

'பவர்' காட்டும் கட்சியினர்; மவுனம் காக்கும் அதிகாரிகள்!

உடுமலை யூனியல் ஆபீஸ்ல, கிராம மக்கள் நிறைய பேரு, அலைமோதிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன். கிடைத்த தகவல் இதோ...தமிழக அரசு, கலைஞரின் கனவு இல்ல திட்டத்துல, கிராமத்துல வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்துது. இத்திட்டத்துல, இடைத்தரகர்கள தவிர்க்க, நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியிருக்கு.ஆனா, கிராமங்கள்ல இருக்கும் ஆளும்கட்சிக்காரங்க, மக்களை அலைக்கழிக்கும் வகையில செயல்படுறாங்க. ஆன்லைனில், விண்ணப்பிப்பது குறித்து தெரியாமல் மக்கள் கேட்டால், அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதில்லை.மாறாக, கட்சி பிரமுகரிடம் 'ரெக்கமன்ட்' வாங்கி தருகிறேன்; அப்ப தான் நிதி ஒதுக்கீடு கிடைக்கும்னு சொல்லி, மக்கள அலையவிடுறாங்க. கட்சிக்காறங்க கிட்ட இருந்து விண்ணப்பம் வாங்கினா தான், திட்டத்துல முன்னுரிமை கிடைக்கும்னு மக்களை குழப்புறாங்க.இதையெல்லாம் நம்பி, ஆளும்கட்சிக்காரங்க பின்னாடி அலையும் மக்கள், கடைசியில திட்டமே வேண்டாம்னு, எல்லா முயற்சியையும் கைவிட்டர்றாங்க.தமிழக அரசு, மானிய திட்டங்களை எளிமைப்படுத்த 'ஆன்லைன்' சேவைய துவங்கியிருக்கு. இது குறித்து, நிறைய விழிப்புணர்வும் பண்ணியிருக்கு. ஆனா, உள்ளூர் ஆளும்கட்சியினர் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்காமல் செய்யும் வகையில், சுயவிளம்பரம், சுய நலனுக்கு கிராம மக்கள அலைக்கழிக்கறாங்க.ஊரக வளர்ச்சித்துறையினரும், திட்டம் குறித்து மக்களுக்கு நேரடியா சொல்லாம, ஆளும்கட்சிக்காரங்க பின்னாடி கைகட்டி நிற்கறதால, மக்களுக்கும் குழப்பம் அதிகமாகி, தாங்களுக்கு 'விடியலே' இல்லைனு புலம்ப துவங்கிட்டாங்க.








      Dinamalar
      Follow us