sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : ஆக 10, 2025 10:19 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போட்டிகள்ல பங்கேற்கறதாலவகுப்புகள் தான் பாதிக்குது பள்ளிகள்ல அந்தப்பக்கம் பாத்தா குறுமைய போட்டி, இந்த பக்கம் பாத்தா கலைத்திருவிழானு, ஒரே கோலாகலமாக இருக்குது. சரி, போட்டிகள் எப்படி போயிட்டு இருக்குதுனு பார்க்க பள்ளிகளுக்கு ஒரு 'விசிட் 'அடித்தோம்.

போட்டிகள் என்னவோ நல்லாதான் போகுது. ஆனா, வகுப்புகள் தான் மோசமா இருக்குதுனு ஆசிரியர்கள் புகார் கூறினாங்க. ஒரு பள்ளியில எத்தனை பேர் இருக்காங்கலோ, அத்தனை பேரையும் கண்டிப்பா கலைத்திருவிழாவுல கலந்துக்க வைக்கச் சொல்லி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கு.

கலந்துக்க வைக்கறது பெரிய விஷயம் இல்ல. ஆனா, அப்படி கலந்துக்கறது குறித்த விபரங்களை 'எமிஸ்'ல பதிவு பண்ணிக்கிட்டே இருக்கணுமாம்.

'எமிஸ்' பணிகளுக்கு ஆட்கள் போடபட்டிருந்தாலும், அந்த விபரங்கள முழுமையாக ஆசிரியர்கள் தான் தயார் பண்ணி கொடுக்கணும். இப்ப திறன் பயிற்சி போயிட்டு இருக்கு. வகுப்பு எடுக்கிறத தவிர, மற்ற பணிகள் தான் அதிகமாக நடக்குது.

அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் பங்கேற்று இருக்காங்கனு, பெருமை சேர்க்க கல்வித்துறை இப்படி பண்ணுறதால வகுப்புகள் தான் பாதிக்குது.

ஆதார் பதிவுக்கு டோக்கன் கொடுக்கஏஜன்ட் நியமிச்சு வசூல் நடக்குது பொள்ளாச்சி போஸ்ட் ஆபீசுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு பலர் ஆதார் புதிதாக எடுக்கவும், திருத்தம் செய்யவும் டோக்கன் வாங்கி வரிசையில நின்னுகிட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர் கிணத்துக்கடவுல இருந்து வந்திருந்தார். என்ன இந்த பக்கம் வந்திருக்கிறீங்கனு கேட்டேன்.

கிணத்துக்கடவுல ஆதார் சேவை இல்ல. அதனால தான் இங்க வந்தேன். இங்க டோக்கன் வாங்குறதுக்கு படாதபாடு பட வேண்டியிருக்கு. சர்வ சாதாரணமா எல்லாருக்கும் டோக்கன் கிடைக்காது. ஒரு டோக்கன், 350 ரூபா வசூலிக்கறாங்க.

இங்க கிணத்துக்கடவு பகுதி மக்கள் அதிகம் வர்ரதால இப்போ, 500 ரூபா வரைக்கும் வசூல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்குன்னு தனியா கிணத்துக்கடவுக்கு ஒரு ஏஜன்ட், பொள்ளாச்சிக்கு ஒரு ஏஜன்ட்னு நியமிச்சு வைச்சிருக்காங்க.

யாரு அந்த ஏஜன்டுன்னு சொல்லுங்கனு கேட்டேன். அதுக்கு, எல்லாத்தையும் என் அப்பன் முருகன் பாத்துக்குவான்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்.

காரணம் சொல்லாத அதிகாரிகள்அலைமோதுவதால் அதிருப்தி பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், நண்பருடன் டீ சாப்பிட சென்றேன். அப்ப, அங்கு மூதாட்டி ஒருவர், 'என்னப்பா இப்படி அலைக்கழிக்கீறாங்கனு,' புலம்பிட்டு இருந்தார். என்னனு விசாரிச்சேன்.

மகளிர் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்னு அறிவிச்சாங்க. கடந்த ஜன., மாதம் முதல் திடீரென மகளிர் உரிமைத்தொகை நிறுத்தி விட்டாங்க. என்னனு தெரியல. சப் - கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தும் பார்த்துட்டேன்.

எதற்காக நிறுத்துனீங்கனு கேட்டால், அதற்குரிய பதில் கிடைக்கல அடிக்கடி வந்து கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டீங்கறாங்க. ஆறு மாசமா நடந்தும் எந்த பலனும் கிடைக்கல. யார்கிட்ட போய் சொல்லறதுனு தெரியல. காரணத்தை சொல்லிட்டா பரவாயில்லை.

இப்ப கூட கேட்டுட்டுதான் வர்றேன். யாருமே பதில் சொல்ல மட்டீங்கறாங்க. நடந்து நடந்து கால் தான் வலிக்குது. என்னப்போல எத்தனை பேரு அலைமோதிட்டு இருக்கானு தெரியலனு, புலம்பினார்.

ஏலம் எடுக்காம பார் நடத்துறாங்கதடுக்க எந்த அதிகாரிக்கு தில் இருக்கு பொள்ளாச்சி, வால்பாறை ரோட்டில் நண்பருடன் பயணித்த போது, டாஸ்மாக் பார்ல அட்ராசிட்டி நடக்குது. தடுக்க தான் ஆளில்லைனு ஆதங்கப்பட்டாரு. என்னனு விசாரிச்சேன்.

டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இருக்கற பார்கள் ஏலம் விட்ட பிறகே, தனி நபரால் நடத்தப்படணும். பார் ஓனர் மதுபாட்டில்களை சேமித்து வைக்கவோ அல்லது விற்கவோ கூடாது. அப்படி செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.

உணவு பாதுகாப்பு துறையில பதிவு பெற்ற பிறகு, பாக்கெட் குடிநீர், குளிர்பானங்கள், வேகவைத்த அல்லது வறுத்த பருப்பு வகைகள், முட்டை, மீன் மற்றும் இறைச்சி வகைகளை நியாயமான விலையில் விற்கணும்.

பார் வளாகத்துக்குள்ள சமைக்கவோ அல்லது அடுப்புகளை இயக்கவோ அனுமதி இல்லை. ஆனா, பொள்ளாச்சி நகரம், புறநகர் பகுதியில எந்த ஒரு டாஸ்மாக் பாரிலும் இந்த நிபந்தனைகள யாரும் பின்பற்றதில்ல. சாப்பிடுற உணவு பொருள் எல்லாம் தரமில்லாமல, சுகாதாரம் இல்லாம இருக்கு.

இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான நபர்கள் ஏலம் எடுக்காமலே பார்களை நடத்திட்டு இருக்காங்க. இந்த தவறையெல்லாம் தடுக்க அதிகாரிகளுக்கு 'தில்' இல்லனு, சொன்னார்.

தண்ணீர் திருட்டு குறையாதுங்கநொந்து புலம்பும் விவசாயிகள் எத்தனை குழு போட்டாலும் பாசன தண்ணீர் திருடறது குறையாதுங்க, என, குடிமங்கலம் நால்ரோட்டில் விவசாயிகள் புலம்பி கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...

திருமூர்த்தி டேம்ல இருந்து தண்ணீர் திறந்ததும் அங்கங்க குழாய் போட்டு நைட்டுல தண்ணீர் திருடறாங்க. குறிப்பா, உடுமலை கால்வாயில ஆத்துக்கிணத்துப்பட்டி பக்கம் வெளிப்படையாகவே தண்ணீர் திருடுறாங்க.

சில நேரம் வாய்க்கால் பக்கத்துல இருக்கற பஞ்சாயத்து போர்வெல்லுக்கான கரண்ட்டையும் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கறாங்க. கேட்டா குடிநீருக்கு எடுக்கிறோம்னு சொல்றாங்க. விவசாயிகள் புகார் சொன்னாலும் நடவடிக்கை எடுக்கல. கால்வாய் தண்ணியை எப்படி நேரடியாக குடிநீருக்கு பயன்படுத்த முடியும்னு தெரியல.

தண்ணீர் திருட்டை தடுக்க திருப்பூர் கலெக்டர் எத்தனை குழு அமைச்சாலும், எந்த பயனும் இல்லை. விவசாயிங்க புகாருக்கு அதிகாரிங்க நடவடிக்கை எடுத்த காலமெல்லாம் மலையேறி போச்சு. பாசன காலம் முடியும் வரைக்கும் நாம இப்படித்தான் புலம்பிட்டு இருக்கணும். எப்படியோ விதைச்சிருக்கற மக்காச்சோளத்துக்கு தண்ணீர் கிடைச்சா போதும்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

ஆளும்கட்சியினர் அக்கப்போர்; அ.தி.மு.க.வினர் குஷி

வால்பாறை பஸ் ஸ்டாண்டில் ஆளும்கட்சிக்காரங்க, 'நகராட்சியில நம்ம கட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தால, சட்டசபை தேர்தல்ல வார்டுக்குள்ளேயே ஓட்டு கேட்க முடியாம போயிடும் போலிருக்குனு,' பேசிக்கிட்டாங்க. என்ன விஷயம்னு கவனித்தேன். வால்பாறை நகராட்சியில கடந்த ஆறு மாசமாகவே, தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கு. அதனால மன்றக்கூட்டமும் நடக்கல, வார்டுகளில் எந்த வேலையும் நடக்கல. உச்ச கட்டமாக தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கவுன்சிலர்கள் துடியா துடிக்கறாங்க. ஆனா, மொபைல்போனை கொண்டு போக விடுலைங்கற பிரச்னையால, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற ஓட்டெடுப்பு நடத்தும் கூட்டமும் ரத்தாயிருச்சு. அடுத்த கட்டமாக என்ன பண்ணலாம்னு, 13 கவுன்சிலர்களும் யோசிக்கறாங்க. இப்படியே போனா வர்ற சட்டசபை தேர்தல்ல ஆளும்கட்சிக்காரங்க வார்டு பக்கம் ஓட்டு கேட்கவே போக முடியாது. எது எப்படியோ தி.மு.க. கவுன்சிலர்களின் இந்த நடவடிக்கையால, அ.தி.மு.க.காரங்க ரொம்ப குஷியா இருக்காங்கனு ஆதங்கப்பட்டாங்க.








      Dinamalar
      Follow us