/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியரசு தின அணிவகுப்பு : மெட்ராஸ் ரெஜிமென்ட் 'டாப்'
/
குடியரசு தின அணிவகுப்பு : மெட்ராஸ் ரெஜிமென்ட் 'டாப்'
குடியரசு தின அணிவகுப்பு : மெட்ராஸ் ரெஜிமென்ட் 'டாப்'
குடியரசு தின அணிவகுப்பு : மெட்ராஸ் ரெஜிமென்ட் 'டாப்'
ADDED : பிப் 10, 2024 12:21 AM

கோவை:குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நடந்த ராணுவ அணிவகுப்பில் முதலிடம் பிடித்த மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களுக்கு, கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டின் 75வது ஆண்டு குடியரசு தினவிழா, புதுடில்லியில் கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக, ராணுவ நாள் அணிவகுப்பு நடந்தது.
எட்டு குழுக்கள் பங்கேற்ற இந்த அணிவகுப்பில், 144 வீரர்களை கொண்ட 'மெட்ராஸ் ரெஜிமென்ட்' அணி முதலிடம் பிடித்தது. இதையடுத்து, நேற்று ரயிலில் கோவை வந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களுக்கு, கோவை டெரியர்ஸ் (110 இன்பான்டரி பட்டாலியன்) சார்பில், ரயில்நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து, கோவை டெரியர்ஸ் வளாகம் வரை, 'செண்டை மேளம்' இசைக்க, நடனமாடிக்கொண்டே ஊர்வலமாக சென்றனர். வெற்ற பெற்ற வீரர்களுக்கு, நேற்று இரவு கலை நிகழ்ச்சி மற்றும் உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முன், 2014ம் ஆண்டு மெட்ராஸ் ரெஜிமென்ட் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.