/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியரசு தின அணிவகுப்பு என்.ஜி.எம்., மாணவர் தேர்வு
/
குடியரசு தின அணிவகுப்பு என்.ஜி.எம்., மாணவர் தேர்வு
குடியரசு தின அணிவகுப்பு என்.ஜி.எம்., மாணவர் தேர்வு
குடியரசு தின அணிவகுப்பு என்.ஜி.எம்., மாணவர் தேர்வு
ADDED : ஜன 23, 2025 11:24 PM
பொள்ளாச்சி; டில்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுரி மாணவர் பிரவீன்பாபு தேர்வானார்.
டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லுாரி மாணவர்களை தேர்வு செய்ய, கடந்த அக்., மாதம் தேர்வு நடந்தது.
அதில், உடல் வலிமை, உயரம், அணி வகுப்பு பயிற்சி, கலை நிகழ்ச்சி போன்ற தேர்வுகள் நடந்தன. பல்கலை அளவில், 4 மாணவிகள், 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், பொள்ளாச்சியில் இருந்து, என்.ஜி.எம்., கல்லுாரி என்.எஸ்.எஸ்., தன்னார்வலர் (தேசிய சேவை திட்டம்) பிரவீன்பாபும் (பி.காம்., இரண்டாம் ஆண்டு) தேர்வு செய்யப்பட்டார்.
வரும், 26ல், கர்தவ்யாபாத்தில் நடைபெற இருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளவும் உள்ளார்.இவரை கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன், இயக்குநர் சரவணபாபு, மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

