தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடியரசு தின சிறப்பு போட்டிகள் நிறைவு

குடியரசு தின சிறப்பு போட்டிகள் நிறைவு

குடியரசு தின சிறப்பு போட்டிகள் நிறைவு


UPDATED : அக் 16, 2026 06:42 PM

ADDED : அக் 16, 2026 06:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 06:42 PM ADDED : அக் 16, 2026 06:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: நேரு விளையாட்டு அரங்கில், கோவை வருவாய் மாவட்டம் மற்றும் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தது.

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வு செய்யும் இறுதி கட்ட போட்டியாக நடைபெற்றதில், மாணவர்கள் பிரிவில் 37 புள்ளிகள் பெற்று மெட்ரோ பள்ளியும், மாணவிகள் பிரிவில் 42 புள்ளிகள் பெற்று ஆர்.ஜே. மெட்ரிக் பள்ளியும் முதலிடம் பிட்த்து ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பைகளைக் கைப்பற்றின.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகுதிகளைச் சேர்ந்த 550 பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழா, ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் லயன் டாக்டர் தேவேந்திரன் தலைமையில் நடந்தது.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், லதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் விக்ரம் மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us