/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோர கிணறுகளில் தடுப்பு; குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
/
சாலையோர கிணறுகளில் தடுப்பு; குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
சாலையோர கிணறுகளில் தடுப்பு; குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
சாலையோர கிணறுகளில் தடுப்பு; குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
ADDED : ஆக 29, 2025 10:13 PM
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., ஷர்மிளா தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
விவசாயிகள் அளித்த மனு:
கோவை மாவட்டத்தில், சாலையோர கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விழுந்து உயிரிழக்கின்றன. வனத்துறை வாயிலாக பயன்பாட்டில் உள்ள, இல்லாத கிணறுகளைக் கணக்கெடுத்து, தடுப்புச் சுவர்கள், இரும்புவேலி அமைக்க வேண்டும்.
பட்டா மாறுதல் செய்யும்போது, நிலத்தின் முழு பரப்பையும், விற்பவரின் பெயரை நீக்காமல், கிரையம் பெறுபவர் பெயரும் கூட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும்.
பயன்பாட்டில் இல்லாத கல்குவாரிகளால், ஆபத்து ஏற்படுகிறது. இதன்படி, நம் மாவட்டத்தில், பாதுகாக்கப்படும் கல்குவாரிகள் குறித்த விவரங்களை, மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும்.
கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன் நிறைய லாரிகள் நிறுத்தப்படுவதால், கருமத்தப்பட்டிபுதுார், எழுச்சிபாளையம், செம்மாண்டம்பாளையம் போன்ற கிராமத்தினர் மாரியம்மன் கோவில், பள்ளிகள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. வேறிடம் தேர்வு செய்து, லாரிகள் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்றனர்.