தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சத்துணவு திட்டம் கேட்டு கோரிக்கை

 சத்துணவு திட்டம் கேட்டு கோரிக்கை

 சத்துணவு திட்டம் கேட்டு கோரிக்கை


ADDED : ஜூன் 29, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 11:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, அப்பணியை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், 'காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே கொடுத்து நிறைவேற்றினால் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவோம்.பகுதி நேர ஊழியர்களான சத்துணவு ஊழியர்களை இத்திட்டத்தில் இணைத்தால், அவர்கள் முழுநேர ஊழியராவதோடு, ஊதிய உயர்வும் கிடைக்கும். இதன் வாயிலாக சத்துணவு ஊழியர் பணியிடங்களை வேகமாக நிரப்பலாம்' எனத் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us