ADDED : ஜூன் 29, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
கோவை: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தால்(சிட்ரா) உருவாக்கப்பட்ட மருத்துவ ஜவுளி பொருட்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.
முன்னதாக அரசூரில் உள்ள கே.பி.ஆர். மில்லில், ஏற்றுமதி குறித்து ஆய்வு செய்தார். அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் அருகில் உள்ள, சிட்ராவின் தொழில்நுட்ப ஜவுளி, மருத்துவ பயன்பாட்டுக்கான கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.
ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து, ஜவுளித்துறையில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை அறிமுகம் செய்வது குறித்தும், தொழில்நுட்ப மேம்பாடு குறித்தும் விவாதித்தார்.
