/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க கோரிக்கை
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க கோரிக்கை
கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க கோரிக்கை
கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க கோரிக்கை
ADDED : ஜன 03, 2024 11:56 PM
மடத்துக்குளம் : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மடத்துக்குளம் தாலுகா, 3வது மாநாடு நடந்தது. ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் பால தண்டபாணி, மா.கம்யூ., தாலூகா செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், தமிழக அரசின் முதல் கூட்டுறவுத்துறையின் ஆலையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கூடுதல் நிதி ஒதுக்கி புதுப்பிக்க வேண்டும்.
அமராவதி அணை பாசனத்தை முறைப்படுத்தவும், ஊரக வேலை திட்டத்தை விவசாய வேலைகளுக்கு பயன் படுத்தவேண்டும்.
மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில், அனைத்துப்பிரிவுகளிலும் லஞ்சம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பாதிக்கின்றனர். மாவட்ட கலெக்டர் தலைமையில், ஆய்வு செய்து, லஞ்ச அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும், காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கவேண்டும்.
ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மடத்துக்குளம் தாலுாகா தலைவராக ராஜரத்தினம், செயலாளராக வீரப்பன், பொருளாளராக வெள்ளியங்கிரி, துணைத்தலைவராக அழகேஸ்வரன், துணைச்செயலாளராக கணேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.