/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இ-வேஸ்ட்' சேகரிப்புக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்
/
'இ-வேஸ்ட்' சேகரிப்புக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்
ADDED : ஜன 10, 2024 11:57 PM
கோவை : மின்னணு கழிவுகளை பிரத்யேக மையத்தில் வழங்கி பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு, மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காதது, 'இ-வேஸ்ட்' என தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இதில், பேட்டரி, ரிமோட், மின் விளக்கு, பென் டிரைவ், ஒயர்கள், பழுதான மொபைல் மற்றும் மின்னணு சாதனங்கள், 10 டன் அளவில் காணப்படுகின்றன.
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 பிரிவு, 31ன் கீழ் இக்கழிவுகளை இனி பொது மக்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் முறையாக பிரித்து வழங்குமாறு, மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதற்கென, மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட லாலி ரோடு, 73வது வார்டு, மாநகராட்சி பூங்கா அருகே பிரத்யேக மின்னணு கழிவு(இ-வேஸ்ட்) சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் காலை, 8:00 முதல் மதியம் 3:00 மணி வரை இக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
பின்னர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்ற மின்னணு கழிவு மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.
எனவே, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொது மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.