ADDED : அக் 21, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை மாவட்டம் 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்கத்தின் சிறப்பு கூட்டம், சாய்பாபா கோவில் அருகே உள்ள அரங்கில் நடந்தது.
இதில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, ஆண்டு ஊதிய உயர்வை விரைந்து வழங்க வேண்டும், ஆம்புலன்ஸில் நீடிக்கும் ஆட்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும், தீபாவளி போனசை விரைவாக வழங்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆம்புலன்ஸ்களுக்கு உரிய மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.