/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார கோரிக்கை
/
ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார கோரிக்கை
ADDED : அக் 09, 2024 10:36 PM
சூலுார் : அப்பநாயக்கன்பட்டி கிழக்கு வீதியில், ஆக்கிரமிப்பை அகற்றி, சாக்கடையை தூர்வார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி கிழக்கு வீதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் அளித்த மனு விபரம்; அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி கிழக்கு வீதியில் எங்களது வீடுகள், கடைகள் உள்ளன. முன்புறம் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
ஆக்கிரமிப்புகளால், ஆறு அடிக்கு கழிவு நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. குழந்தைகள் அவ்வழியே சென்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கால்வாயை தூர் வாரி, கழிவு நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

