/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரிக்கை
/
தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 29, 2024 11:26 PM
மேட்டுப்பாளையம்:காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், மிகவும் பழுதடைந்துள்ள வீடுகளை, சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும், 10, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய, நுாற்றுக்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன.
இந்த வீடுகளின் கான்கிரீட் மேல் கூரையில், சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன.
இந்த வீடுகளை சீரமைக்கும்படி பொதுமக்கள், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ''தொகுப்பு வீடுகளில் மழைக்காலத்தில், மேல் கூரையிலிருந்து தண்ணீர் கசிந்து ஒழுகுகிறது.
பல வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து, துருப்பிடித்த நிலையில் கம்பிகள் தெரிகின்றன. அதனால் மழை காலத்தில், வீடுகளின் உள்ளே குழந்தைகளுடன் படுத்து தூங்குவதற்கு, அச்சமாக உள்ளது.
எனவே மாவட்ட கலெக்டர், காரமடை ஒன்றியத்தில் ஊராட்சிகளில் உள்ள, பழுதடைந்த தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்து, அதை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.