/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்க கோரிக்கை
/
ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்க கோரிக்கை
ADDED : அக் 30, 2024 11:42 PM
மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம்-ராமேஸ்வரம் இடையே ரயில் இயக்க ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரயில் பயணிகள் நல சங்கம் (கோவை, திருப்பூர், திண்டுக்கல்) மாவட்டங்களின் ஒருங்கிணைந்த செயலாளர் மோகன் கூறியதாவது:
ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்கினால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும். மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பழனி, ராமேஸ்வரத்திற்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் அதிகம்.
ராமேஸ்வரம் ரயில் வந்தால், ஆன்மிக பக்தர்கள் மட்டுமல்லாமல், மீனவர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
அங்குள்ள மீன்கள் இங்கு லாரிகள் உள்ளிட்ட பிற வாகனங்கள் வாயிலாக சாலை மார்க்கமாக வருகிறது. இதற்கு அளிக்கப்படும் வாடகைகளை விட, ரயிலில் மீன்களை அனுப்பினால் மிகவும் குறைந்த கட்டணம் தான். இதனால் மீன்களின் விலையும் கோவையில் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு கோவையில் உள்ள பல தொழில்நிறுவனங்களில் இருந்து உற்பத்தி பொருட்கள் அனுப்பப்படுகிறது. ரயிலில் அனுப்பினால் நேரச்செலவு, பணச்செலவு மிச்சமாகும்.
மேட்டுப்பாளையம்--- ராமேஸ்வரம் இடையே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும்.
புதிதாக தொழில்நிறுவனங்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.-

