/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனைக்கு நவீன சி.டி., ஸ்கேன் ரேடியோலாஜி நியமிக்க கோரிக்கை
/
அரசு மருத்துவமனைக்கு நவீன சி.டி., ஸ்கேன் ரேடியோலாஜி நியமிக்க கோரிக்கை
அரசு மருத்துவமனைக்கு நவீன சி.டி., ஸ்கேன் ரேடியோலாஜி நியமிக்க கோரிக்கை
அரசு மருத்துவமனைக்கு நவீன சி.டி., ஸ்கேன் ரேடியோலாஜி நியமிக்க கோரிக்கை
ADDED : ஏப் 24, 2025 10:35 PM
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, புதிதாக நவீன சி.டி., ஸ்கேன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தினமும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு, நோயாளிகள் வசதிக்காக, சி.டி., ஸ்கேன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தினமும், 25 - 40 பேருக்கு ஸ்கேன் செய்யப்படுகிறது.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை கொண்டு வருவோருக்கு, இலவசமாக ஸ்கேன் செய்யப்படுகிறது. மற்றவர்களுக்கு சலுகை கட்டணமாக, 500 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும், 700 முதல், 800 பேருக்கு பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சி.டி., ஸ்கேன் தற்போது செய்யப்படுகிறது. டாக்டர் வாயிலாக ரிப்போர்ட் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சட்டசபை மானிய கோரிக்கையில் அமைச்சர் சுப்ரமணியம், நவீன சி.டி., ஸ்கேன் இயந்திரம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன் வாயிலாக, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் பயனடைவர். இதற்கு மருத்துவமனை நிர்வாகம், நன்றி தெரிவித்துள்ளது.
ரேடியோலாஜி தேவை
நோயாளிகள் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'சி.டி., ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பிரிவு, 24 மணி நேரமும் செயல்படுவதில்லை. ஸ்கேன் பிரிவு, காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரையும், எக்ஸ்ரே பிரிவு காலை, 8:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.
இது, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ரேடியோலாஜி நியமிக்க வேண்டும். விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளதால், இந்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,' என்றனர்.