/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமத்தில் தார்சாலை அமைக்க கோரிக்கை
/
கிராமத்தில் தார்சாலை அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 14, 2025 01:32 AM
பொள்ளாச்சி,;
பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசு கிராமத்தில், தார் சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர், தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: தேவம்பாடி வலசு கிராமம் மெயின் ரோட்டில் இருந்து, அண்ணமார் கோவில் வழியாக, 3 கி.மீ., துாரத்திற்கு மெட்டல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 75க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இந்த சாலை, பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தார் சாலை அமைத்துத்தர பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. பழுதடைந்த சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

