/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் பார்க்கிங்கில் அதிக கட்டணம் வசூல் குத்தகையை ரத்து செய்ய கோரிக்கை

ADDED : மார் 13, 2026 06:18 AM

கோவை: காந்திபுரம் கிராஸ்கட் சாலை லட்சுமி காம்ப்ளக்ஸ் அருகே மாநகராட்சியின் கார் பார்க்கிங் உள்ளது.
இங்கு கார் நிறுத்த இரண்டு மணி நேரத்துக்கு கட்டணம், 30 ரூபாய் என்று மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது.
ஆனால் குத்தகைதாரர் ஒரு மணிநேரத்துக்கு, 30 ரூபாய் வசூலிக்கிறார். ஒன்றரை மணி நேரத்துக்கு, 45 ரூபாய் வசூலிக்கிறார். யாராவது கேட்டால், 'இங்க எப்பவுமே இப்படித்தாங்க. விருப்பம் இல்லைன்னா வேற எங்காவது பார்க் பண்ணுங்க' என ஊழியர்கள் சொல்கின்றனர்.
கிராஸ்கட் சாலை மட்டுமல்ல, டவுன்ஹால் மணிக்கூண்டு, ராஜவீதி பார்க்கிங் ஆகியவற்றிலும் இதுதான் நடைமுறையாக உள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரர் உரிமத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்; அல்லது அவர்கள் வசூலிப்பதுதான் சரி என அறிவிக்க வேண்டும் என கார் உரிமையாளர்கள் எதிர்பார்கின்றனர்.