/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை: ஆய்வு மேற்கொள்ள வேண்டுகோள்
/
குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை: ஆய்வு மேற்கொள்ள வேண்டுகோள்
குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை: ஆய்வு மேற்கொள்ள வேண்டுகோள்
குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை: ஆய்வு மேற்கொள்ள வேண்டுகோள்
ADDED : நவ 28, 2025 03:29 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சிறு, குறு தொழிற்சாலைகளைக் கண்டறிந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சியில், அதிகப்படியான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அதேபோல, சுற்றுப்பகுதி பேரூராட்சி, ஊராட்சிகளிலும், குடியிருப்புகளுக்கு மத்தியில் இத்தகைய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.
குறிப்பாக, வெல்டிங், வாகனங்களுக்கு 'பாடி' கட்டுதல், சர்வீஸ் ஸ்டேஷன் என, பல்வேறு வகையிலான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில், இருந்து வெளியேறும் ஒலி மாசு காரணமாக, குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கின்றனர். இத்தகைய தொழிற்சாலைகளைக் கண்டறிந்து, இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
குடியிருப்பு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலையில் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறைவாகவே உள்ளது. இது ஒருபுறமிருக்க, தொழிற்சாலைகளில் உற்பத்தி நேரத்தின்போது, அதிக சப்தம் வெளியேறுகிறது.
இதேபோல, தொழிற்சாலைக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களால் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளும் சேதமடைகின்றன. மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து, குடியிருப்புகளில் மக்களுக்கு இடையூறாக செயல்படும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

