/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விமான நிலைய அணுகு சாலைகளை பிரதான ரோடுகளுடன் இணைக்க கோரிக்கை
/
கோவை விமான நிலைய அணுகு சாலைகளை பிரதான ரோடுகளுடன் இணைக்க கோரிக்கை
கோவை விமான நிலைய அணுகு சாலைகளை பிரதான ரோடுகளுடன் இணைக்க கோரிக்கை
கோவை விமான நிலைய அணுகு சாலைகளை பிரதான ரோடுகளுடன் இணைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 09:26 PM
சூலுார்; ''விமான நிலைய அணுகு சாலைகளை, பிரதான ரோடுகளுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, விவசாயிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சின்னியம்பாளையம் விவசாயிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனு விபரம் :
கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து, முன்னர் கலெக்டராக இருந்த உமாநாத், விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தகுந்த இழப்பீடும், எஞ்சியுள்ள நிலத்துக்கு செல்லும் வகையில், இரு புறமும், 10 மீ. சர்வீஸ் ரோடுகள் அமைத்து தர உறுதி அளித்திருந்தார்.
அதன் காரணமாக, பிளாக் எண். 2, 19, 20, 21, 23 ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணுகு சாலையை பயன்படுத்தி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில், ரோடு அமைக்க நிலங்களை வழங்கினர்.
அதன்படி, பிளாக் 2ல் அமையும் அணுகு சாலையை, இருகூர் மகாத்மா காந்தி ரோடு, எஸ்.ஐ.எஸ்.எச் காலனி ஏர்போர்ட் ரோடு ஆகியவற்றுடன் இணைந்து, திருச்சி ரோட்டுடன் இணைக்க வேண்டும்.
எஸ்.ஐ.எஸ்.எச்., காலனியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் திட்ட சாலை வழியாக அவிநாசி ரோட்டையும் இணைக்க வேண்டும்.
இவ்வாறு, அணுகு சாலைகளை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரோடுகள், அவிநாசி ரோடு, திருச்சி ரோட்டுடன் இணைப்பதன் வாயிலாக, சுற்றுவட்டார மக்கள் சிரமமின்றி அனைத்து பகுதிகளுக்கும் சென்று வர முடியும்.
ஒண்டிப்புதுாரில் அமைய உள்ள, கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கும் எளிதில் செல்ல முடியும். அவிநாசி ரோட்டிலும் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்.
எனவே அணுகு சாலைகளை அமைத்து, மாநில அரசே தன் வசம் வைத்து, மற்ற ரோடுகளுடன் இணைக்கும் மேம்பாட்டு பணிகளை செய்தால், சுற்றுவட்டார பகுதிகள் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.