/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் பணியில் தொடர கோரிக்கை
/
அரசு மருத்துவமனையில் பணியில் தொடர கோரிக்கை
ADDED : மே 19, 2025 11:52 PM
கோவை; கோவை அரசு மருத்துவமனையில், துாய்மை பணி பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளில், 450க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர்.
இவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து, 'எங்களுக்கு வயசாகிப்போச்சுன்னு சொல்லி, வேலைக்கு வர வேண்டாம்னு சொல்றாங்க. ராஜினாமா லெட்டர் எழுதி வாங்கிக்கிட்டாங்க' என கண்ணீர் மல்க கூறினர். அதற்கு கலெக்டர், மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசுவதாக, சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இது குறித்து, அப்பெண் துாய்மை தொழிலாளர்கள் கூறுகையில், 'கோவை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்து, பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இனியும் இ.எஸ்.ஐ.,, பி.எப்., பிடித்தம் செய்யவில்லை. இருப்பினும் சகித்துக்கொண்டு வேலை செய்கிறோம். தினக்கூலி, 721 ரூபாய் சொன்னார்கள். ஆனால், 221 ரூபாயை பிடித்துக்கொள்கின்றனர். ஆயிரம் பேர் செய்யும் வேலையை, 450 பேர்தான் செய்கிறோம்' என்றனர்.