/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை ரோட்டில் நெரிசல் அகலப்படுத்த வேண்டுகோள்
/
மருதமலை ரோட்டில் நெரிசல் அகலப்படுத்த வேண்டுகோள்
ADDED : ஜன 25, 2024 06:33 AM
கோவை : நெரிசலை தவிர்க்கும் விதமாக, மருதமலை ரோட்டை அகலப்படுத்தி தருமாறு நெடுஞ்சாலை துறையிடம், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரிடம், 41வது வார்டு கவுன்சிலர் சாந்தி அளித்த மனுவில், 'பி.என்.புதுாரில், மாநில நெடுஞ்சாலை துறை வசம் உள்ள மருதமலை ரோடானது, 14 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. தற்போது, வீரகேரளம், வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்துார் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், தொழிற்சாலைகள் பெருகிவிட்டன.
இதனால், மருதமலை ரோட்டில் குறுகலான பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் நடந்து செல்வோரும், மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
விபத்து அபாயம் உள்ள நிலையில் கருப்பராயன் கோவில் பஸ் ஸ்டாப் வரையிலான இடங்களில், ரோட்டை அகலப்படுத்தித்தர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.