/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயனற்ற மேல்நிலை தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
/
பயனற்ற மேல்நிலை தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : டிச 16, 2024 07:47 PM

பொள்ளாச்சி:
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பேரூராட்சி அலுவலக வளாகத்தில், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது, அந்த மேல்நிலைத் தொட்டி, பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து, தொட்டியை தாங்கி நிற்கும் துாண்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. குடியிருப்புகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டாலும், சிதிலடைமந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அகற்றப்படாமல், அபாயத்துடன் உள்ளது. மழைக்காலத்தில் பலத்த காற்று வீசும்போது, மேல்நிலை தொட்டி சாய்ந்து, விபத்து ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது.
குறிப்பாக, தொட்டியின் சிமென்ட் காரை உதிர்ந்துள்ளது. நீர்த்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் துாண்களில் விரிசல் ஏற்பட்டு, பலவீனமாக உள்ளது. விரைந்து, மேல்நிலை தண்ணீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

