/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டுகோள்
/
சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டுகோள்
ADDED : ஜன 20, 2025 10:51 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பகுதியில், சுற்றுலாவை மேம்படுத்த தகவல் மையம் அமைக்க வேண்டுமென, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியில், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள்நிறைந்துள்ளது. பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி என நான்கு வனச்சரகங்களும் உள்ளன. ஆழியாறு அணை, இயற்கையாக மூலிகை கலந்த நீராக கொட்டும் கவியருவியும் உள்ளது. வால்பாறைக்கும் செல்லும் ரோடு, 40 கொண்டைஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது.
வால்பாறையில், சின்னக்கல்லார், சோலையாறு டேம், மேல்நீராறு, கீழ் நீராறு என நீர்தேக்கங்கள்; பசுமையான தேயிலை தோட்டங்கள் என இயற்கை அம்சங்கள் நிறைந்துள்ளன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை பாலாஜி கோவில் என, ஆன்மிக தலங்கள் உள்ளன.
இயற்கையும், ஆன்மிகமும் கலந்த பகுதியாக உள்ள பொள்ளாச்சியின் அழகு, பல திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன.அதனால், பொள்ளாச்சியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொள்ளாச்சிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வழிகாட்டுவதற்கு வசதியாக பொள்ளாச்சியில் தகவல் மையம் அமைக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

