sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 எஸ்டேட்களில் கன்டெய்னர் ரேஷன் கடைகள் திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை

/

 எஸ்டேட்களில் கன்டெய்னர் ரேஷன் கடைகள் திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை

 எஸ்டேட்களில் கன்டெய்னர் ரேஷன் கடைகள் திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை

 எஸ்டேட்களில் கன்டெய்னர் ரேஷன் கடைகள் திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை


ADDED : நவ 14, 2025 09:17 PM

Google News

ADDED : நவ 14, 2025 09:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை, எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளை, கன்டெய்னர் கடைகளாக மாற்ற வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 15,250 ரேஷன் கார்டுதார்களுக்கு, 43 ரேஷன் கடை வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறை நகரை தவிர, பிற எஸ்டேட் பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்தையும் யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால், உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:

வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், ஆண்டு முழுவதும் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரத்தில், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைந்து, ரேஷன் அரிசிக்காக கடைகளை இடித்து சேதப்படுத்துகின்றன.

இதனால், தொழிலாளர் குடியிருப்பில் ரேஷன் பொருட்கள் தொடர்ந்து இருப்பு வைக்க முடியாத நிலையில், மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை அகற்றி, அந்தப்பகுதியில் கன்டெய்னர் கடைகள் அமைக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதி ரேஷன் கடைகள், யானைகள் வழித்தடத்தில் உள்ளன. இதனால், அடிக்கடி யானைகள் கடைகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. பல லட்சம் மதிப்பிலான ரேஷன் பொருட்கள் சேதமாகி வருவதோடு, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஏற்கனவே தாய்முடி, முத்துமுடி, அய்யர்பாடி ரோப்வே உள்ளிட்ட ஐந்து இடங்களில், கன்டெய்னர் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற எஸ்டேட் பகுதியில் உள்ள கடைகளும் விரைவில் கன்டெய்னர் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us