/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோலம்பாளையம் மேம்பாலம் பணிகளில் தொய்வு விரைந்து செயல்படுத்த கோரிக்கை
/
தோலம்பாளையம் மேம்பாலம் பணிகளில் தொய்வு விரைந்து செயல்படுத்த கோரிக்கை
தோலம்பாளையம் மேம்பாலம் பணிகளில் தொய்வு விரைந்து செயல்படுத்த கோரிக்கை
தோலம்பாளையம் மேம்பாலம் பணிகளில் தொய்வு விரைந்து செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 22, 2025 11:23 PM

மேட்டுப்பாளையம்:தோலம்பாளையம் மேம்பாலம் பணிகளை, விரைவாக செய்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை நகரில், கோவை, மேட்டுப்பாளையம், தோலம்பாளையம், கன்னார்பாளையம் ஆகிய நான்கு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை குறைக்க, காரமடையில் மேட்டுப்பாளையம் - தோலம்பாளையம் சாலைகள் இடையே, ரயில்வே மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, 28.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
மேட்டுப்பாளையம்-- காரமடை சாலையில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே துவங்கி, மேட்டுப்பாளையம் ரயில் பாதையை கடந்து, தோலம்பாளையம் சாலையில் சென்றடையும் வகையில், மேம்பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகின்றன. மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பணிகள் முடிக்கவில்லை. இதுகுறித்து காரமடை நகர மக்கள் கூறியதாவது: தோலம்பாளையம் மேம்பால கட்டுமான பணிகள், மிகவும் மெதுவாக நடைபெறுகின்றன. ரயில் பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க, இரும்பு கர்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் ரயில்வே மேம்பாலத்தின் இரு பக்கமும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்படும் மேம்பால பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகின்றன.
இன்னும் மேம்பாலத்தில் இரு பக்கம் தார் சாலைகள் அமைக்கவில்லை. பாலத்தின் இருபக்கம் பக்க சாலைகளுக்கு, (சர்வீஸ் ரோடுகள்) தார் போடவில்லை.
காரமடை-மேட்டுப்பாளையம் சாலையிலும், தோலம்பாளையம் சாலையிலும் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் துவங்கவில்லை. நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், மெத்தனமாக பணிகளை செய்து வருகின்றன. மேம்பாலம் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொது மக்கள் கூறினர்.