/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டுகோள்
/
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டுகோள்
ADDED : ஜூன் 14, 2025 11:35 PM

கோவை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின், மாவட்ட பேரவை கூட்டம், வடவள்ளி சக்தி காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பலராமன் தலைமை வகித்தார்.
இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் பேசுகையில், ''சங்க உறுப்பினர்கள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருந்து போராடினால்தான், உரிமையை பாதுகாக்க முடியும்,'' என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தி.மு.க., அரசு, தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி, 70 வயது முடித்த ஓய்வூதியர்களுக்கு 20 சதவிகிதமும், 85 வயது முடித்த ஓய்வூதியர்களுக்கு 30 சதவிகிதமும், கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.
சத்துணவு -அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம், 6800 ரூபாய் - வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில சங்க தணிக்கையாளர் வெங்கடேசன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிலால் மக்துாம், முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட, 200 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.