/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமுதாய நலக்கூடத்தை நுாலகமாக்க கோரிக்கை
/
சமுதாய நலக்கூடத்தை நுாலகமாக்க கோரிக்கை
ADDED : ஏப் 16, 2025 09:38 PM

வால்பாறை, ;வால்பாறையில், காட்சிப்பொருளாக உள்ள சமுதாய நலக்கூடத்தை, நுாலகமாக மாற்ற வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான குடியிருப்புக்கள், சமுதாயநலக்கூடம், தங்கும்விடுதி உள்ளிட்டவை உள்ளன. ஸ்டேன்மோர் சந்திப்பு தொழிலாளர் நல வாரியத்தின் எதிரில், நகராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
இந்த கட்டடத்தை விரிவுபடுத்தி, பகுதி நேர நுாலகமாக மாற்ற வேண்டும் என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வாசகர்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து, அரசு அலுவலங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்க வேண்டும். ஸ்டேன்மோர் சந்திப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தை, விரிவுபடுத்தி பகுதி நேர நுாலகமாக மாற்ற வேண்டும்.
இதனால், அருகில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். எஸ்டேட் பகுதியில் உள்ள மனமகிழ் மன்றங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது போல், அன்றாட நாளிதழ்களை வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.