/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் இம்மாத இறுதிக்குள் வழங்க கோரிக்கை
/
ரேஷன் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் இம்மாத இறுதிக்குள் வழங்க கோரிக்கை
ரேஷன் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் இம்மாத இறுதிக்குள் வழங்க கோரிக்கை
ரேஷன் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் இம்மாத இறுதிக்குள் வழங்க கோரிக்கை
ADDED : டிச 11, 2025 06:46 AM
கோவை: ரேஷன் கடை பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க அமைக்கப்பட்டுள்ள ஊதியக்குழு ஆய்வு பணியை விரைந்து முடித்து, டிச., இறுதிக்குள் ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் தினேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகளை ஆய்வு செய்ய, கூட்டுறவு துறை நிலைக்குழுவை நியமித்து உத்தரவிட்டு உள்ளது.
2026 பிப்.,க்கு முன், புதிய ஊதியம் வழங்க வேண்டும். சட்டசபை தேர்தல் வர இருப்பதால், தேர்தல் நடைமுறை விதி காரணமாக, இந்த ஊதிய உயர்வு வழங்கும் பணி தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளது. அதனால், டிச., இறுதிக்குள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.